இந்தியாவில் இ ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளின் ஆதிக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் Ferrato நிறுவனத்தின் Ferrato FEV 650 பைக் பற்றி கீழே காணலாம்.

Continues below advertisement

Ferrato FEV 650:

மிகவும் ஸ்போர்ட்ஸியான, கவர்ச்சியான, ஸ்டைலான தோற்றம் கொண்ட Ferrato FEV 650 இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 747ஆகும். இந்த இ பைக் இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டது. 700 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த Ferrato FEV 650 பைக் உள்ளது. 233 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

198 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த Ferrato FEV 650 இ பைக்கில் 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 198 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது.  இதன் எடை 164 கிலோ ஆகும்.

Continues below advertisement

எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. ஐபி 67 மோட்டார் ஐபி ரேட்டிங் ஆகும். லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

3 வருட வாரண்டி:

முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் அப்சார்பர் பின்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது.  3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. 

சிறப்புகள்:

டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம்,  லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கீலெஸ் லாக்/ அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஆர்டிஃபிசியல் சத்தம் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லைவ் லொகேஷன் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள் ஆகும். ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டெப்ட் சீட் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI