இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கைக்கு நிகராக இ பைக்குகளும் இந்திய சந்தையில் அதிகரித்து வருகிறது. இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனையாகி வரும் இ பைக் Ferrato Disruptor.
Ferrato Disruptor:
இந்த Ferrato Disruptor இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 151. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 129 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 164 கிலோ ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது.
இந்த இ பைக் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் உள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சமே இதன் வசீகர தோற்றம் ஆகும். ஸ்போர்ட்ஸி தோற்றத்தில் மிகவும் வசீகரமாக உள்ள இந்த Ferrato Disruptor பைக் இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறது.
ஆற்றல்:
இதன் அதிகபட்ச ஆற்றல் 6.37 கிலோவாட் ஆகும். இதில் அதிகபட்சமாக 228 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களில் உள்ளது. இதில் 3.97 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரம் இதை சார்ஜ் செய்வதற்கு எடுத்துக் கொள்கிறது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வாரண்டி:
முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனா ஷாக் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் ஆகும்.
டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் இணைய வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது.
சிறப்புகள்:
டூயல் எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் வகையிலே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகளும் எல்இடி-யிலே பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
மிகவும் வசீகரமான தோற்றம் கொண்ட இந்த பைக் இளைஞர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் எடையும் நெடுஞ்சாலைகளில் நல்ல வேகத்தில் காற்றில் ஆடாமல் செல்வதற்கு உகந்ததாக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI