Car Audio System: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் தரமான ஆடியோ சிஸ்டத்துடன் கிடைக்கும் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

கார்களின் ஆடியோ சிஸ்டம்:

பயணத்திற்கான ஒரு இயந்திரம் என்பதையும் தாண்டி, காரில் உள்ள அம்சங்கள் மீது பயனாளர்கள் தற்போது அதிக கவனம் செலுத்துகின்றனர். அதிலும், பயணத்தின் போது இசை என்பது மழைக்காலத்தில் அருந்தும் தேநீரை போன்றது. பயணத்தை இதமானதாகவும், அளுப்பற்றதாகவும் மாற்றுவதில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், தரமான ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஹுண்டாய், மஹிந்திரா மற்றும் டாடா போன்ற பல முன்னணி நிறுவனங்களின் கார் மாடல்களும் உள்ளன. அதிலிருந்து உங்களுக்கான தரமான ஆடியோ சிஸ்டத்தை கொண்ட காரை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதையும் படியுங்கள்: Top 5 Sedan: நம்ம ஊர் ரோட்டுக்கு இது தான் சரி, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான்கள் - டாப் 5 மாடல்

Continues below advertisement

ரூ.15 லட்சம் பட்ஜெட்: தரமான ஆடியோ சிஸ்டம்

6. ஹுண்டாய் i20

ஹுண்டாய் i20 கார் மாடல்களின் டாப் வேரியண்ட்களான  ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) வேரியண்ட்களின் விலை, ரூ.9.38 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இதில் 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்ஸ் மற்றும் ஒரு சப்ஃவூபர் அடங்கிய போஸ் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பிராண்டட் ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டு இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் கார் என்ற பெருமையை i20 பெறுகிறது. ரூ.11.31 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் இதன் டாப்-ஸ்பெக்கான N  லைன் N8 வேரியண்டிலும் இதே சவுண்ட் சிஸ்டம் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹேட்ச்பேக் காரானது, வேரியண்ட் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படிடையில் லிட்டருக்கு 16 முதல் 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார்களை பெற்றுள்ளது.

5. மஹிந்திரா XUV 3XO

மஹிந்திரா XUV 3XO காரின் AX7 வேரியண்டானது ரூ.12.80 லட்சம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6 ஸ்பீக்கர்கள், ஒரு ஆம்ப்லிஃபையர் மற்றும் ஒரு சப்ஃவூபர் கொண்ட கர்டோன் ஸ்பீக்கர் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பிராண்டட் சவுண்ட் சிஸ்டம் கொண்டு மலிவு விலையில் கிடைக்கும் எஸ்யுவி என்ற பெருமையை XUV 3XO பெறுகிறது. இந்த மாடலின் விலை ரூ.8.44 லட்சத்தில் தொடங்கி ரூ.13.98 லட்சம் (சென்னை ஆன் - ரோட்) வரை நீள்கிறது. லிட்டருக்கு 17 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.

4. டாடா நெக்ஸான்

பிராண்டட் ஸ்பீக்கர்களை கொண்டு மலிவு விலையில் கிடைக்கும் கார் மாடலாக நெக்சான் உள்ளது. அதன்படி, 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்ஸ் மற்றும் ஒரு சப்ஃவூபர் அடங்கிய ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. அதுவும் ரூ.13.30 லட்சம் விலையில் தொடங்கும் டாப் ஸ்பெக் வேரியண்டான ஃபியர்லெஸ் +PS  வேரியண்டில் மட்டுமே இந்த சவுண்ட் சிஸ்டம் கிடைக்கும். மின்சார எடிஷனின் டாப் ஸ்பெக் வேரியண்டான எபவர்ட் +45 எடிஷனிலும் இதே சவுண்ட் சிஸ்டம் தொடர்கிறது. இதன் விலை ரூ.16.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இன்ஜின் எடிஷன் 17 முதல் 24 கிலோ மீட்டர் வரையில் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், மின்சார எடிஷன் அதிகபட்சமாக 489 கிலோ மீட்டர் தூரைம் வரையில் ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.

3. ஹுண்டாய் வெர்னா

பிராண்டட் ஸ்பீக்கர் கொண்டு மலிவு விலையில் கிடைக்கும் இந்த கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே செடான் வெர்னா மட்டுமே. இதன் டாப் ஸ்பெக்கான SX (O) 5 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்ஸ் மற்றும் ஒரு சப்ஃவூபர் அடங்கிய போஸ் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.14.86 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. வெர்னா கார் சராசரியாக லிட்டருக்கு 17 முதல் 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.

2. கியா சோனெட்

கியா சோனெட்டின் டாப் ஸ்பெக்கான GTX+ (ரூ.14.94 லட்சம் முதல்) மற்றும் X-லைன் வேரியண்ட்கள், ஹுண்டாய் ஐ20-யில் இருப்பதை போன்ற 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்ஸ் மற்றும் ஒரு சப்ஃவூபர் அடங்கிய போஸ் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது ஹுண்டாயின் வென்யூவில் உள்ள பிராண்டட் அல்லாத சவுண்ட் சிஸ்டத்தை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. லிட்டருக்கு 22 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் சோனெட், பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார்களை பெற்றுள்ளது.

1. டாடா கர்வ்

டாடா கர்வ் மாடலின் டாப் ஸ்பெக்கான ரூ.15 லட்சத்தில் தொடங்கும் S வேரியண்டில், 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்கள் மற்றும் ஒரு சப்ஃவூபர் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூபேயின் மின்சார எடிஷனின் எம்பவர்ட் _ 55 வேரியண்டிலும் (ரூ.21.25 லட்சம்) இதே சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் எடிஷன் 17 முதல் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாகவும், மின்சார எடிஷன் சுமார் 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாகவும் டாடா அறிவித்துள்ளத்து. பாதுகாப்பு பரிசோதனையில் கர்வ் கார் மாடல் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI