EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Electric Car With 15 Year Battery Warranty: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 ஆண்டு கால வாரண்டியுடன் கூடிய, பேட்டரியுடன் கிடைக்கும் டாப் 5 மின்சார கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Electric Car With 15 Year Battery Warranty: இ15 ஆண்டு கால வாரண்டியுடன் கூடிய பேட்டரி கொண்டுள்ள கார்களின் விலை, ரேஞ்ச் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
15 வருட வாரண்டி கொண்ட பேட்டரியுடன் மின்சார கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் பயன்பாடு தீவிரமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய வாகனங்களின் அதிகப்படியான விலையில் முக்கிய பங்கு வகிப்பதே பேட்டரி தான். காரணம் இதன் உற்பத்தி மிகவும் சிக்கலான மற்றும் செலவுமிக்க நடைமுறையை உள்ளடக்கியதாகும். அந்த பேட்டரியின் நீண்டகால உழைப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அதிகபட்சமாக 15 வருட பேட்டரி வாரண்டியுடன் இந்திய சந்தையில் கிடைக்கும் 5 மின்சார கார்களின் வடிவமைப்பு மற்றும் ரேஞ்ச் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாப் 5 மின்சார கார்கள்
1 & 2. மஹிந்த்ரா மின்சார கார்கள்:
பேட்டரி: மஹிந்த்ரா நிறுவனம் தனது BE 6 மற்றும் XEV 9e கார் மாடல்களுக்கு வாழ்நாள் வாரண்டியை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையானது முதல் உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை கார் இரண்டாவது நபருக்கு விற்பனை செய்யப்பட்டால், இந்த வாரண்டியானது 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிலோ மீட்டர் என்ற நிலைக்கு மாறிவிடும்.
விலை: BE 6 காரானது 59KWh மற்றும் 79KWh பேட்டரி பேக்குகளுடன், ரூ.18.90 லட்சம் தொடங்கி ரூ.28.49 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கிறது. XEV 9e கார் மாடலும் மேற்குறிப்பிடப்பட்ட அதே பேட்டரி எடிஷனில், ரூ.21.90 லட்சம் தொடங்கி ரூ.31.25 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கிறது.
ரேஞ்ச்: பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் XEV 9e காரானது 542 கிலோ மீட்டர் தொடங்கி 656 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், BE 6 கார் 557 கிலோ மீட்டர் தொடங்கி 683 கிலோ மீட்டர் வரையிலும் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. டாடா சியாரா மின்சார எடிஷன்
பேட்டரி வாரண்டி: டாடா நிறுவனத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சியாரா மின்சார எடிஷனின் பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வாழ்நாள் என குறிப்பிடப்படுவது 15 ஆண்டுகள்/ வரம்பற்ற கிலோ மீட்டர் ஆகும். அதேநேரம், இந்த காரானது வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டால் பேட்டரியின் வாரண்டியானது 8 ஆண்டுகள்/1.6 லட்சம் கிலோ மீட்டர் ஆக குறைந்துவிடும்.
விலை: சியாரா மின்சார எடிஷனானது 63KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது ரூ.18.79 லட்சத்தில் தொடங்கி ரூ.26.49 லட்சம் வரை நீள்கிறது.
ரேஞ்ச்: பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 566 கிலோ மீட்டர் தொடங்கி 665கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. எம்ஜி விண்ட்சர் மின்சார கார்:
பேட்டரி வாரண்டி: எம்ஜி நிறுவனம் தனது மின்சார கார்களின் பேட்டரிக்கு 8 வருடங்கள் அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் வாரண்டியை அளிக்கிறது. இது முதல் உரிமையாளருக்கு மட்டுமே பொருந்து. நிறுவனம் சார்பில் விண்ட்சர் காரானது அதிகம் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
விலை: விண்ட்சர் மின்சார காரானது 38KWh மற்றும் 52.9KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் விலையானது ரூ.15.36 லட்சத்தில் தொடங்கி ரூ.20.04 லட்சம் வரை நீள்கிறது.
ரேஞ்ச்: இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 330 கிலோ மீட்டர் தொடங்கி 449 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. காரென்ஸ் க்ளாவிஸ்
பேட்டரி வாரண்டி: ஹுண்டாயின் ஐயோனிக் கார் 5 மாடலும் இந்த பட்டியலில் இருந்தாலும், வாடிக்கையாளர்களின் தேர்வின் அடிப்படையில் கியாவின் காரென்ஸ் க்ளாவிஸ் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த காரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் வரையில் வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை: கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார காரானது 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் விலையானது ரூ.17.99 லட்சத்தில் தொடங்கி ரூ.24.49 லட்சம் வரை நீள்கிறது.
ரேஞ்ச்: பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 404 கிலோ மீட்டரில் தொடங்கி 490 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















