E20 பெட்ரோலால்கார்களைவிடபழையபைக்குகளுக்கேஅதிகஆபத்துஏற்படும் என்றும் எஞ்சின்துரு, மைலேஜ்சரிவுபிரச்சினை உருவாகும் என்றும் தெரிய வந்துள்ளது.

Continues below advertisement

இந்தியாவில் தற்போது E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது.(20 சதவீத எத்தனால் மற்றும் 80 சதவீத பெட்ரோல் கலந்ததே E20 பெட்ரோல் ஆகும். இந்த புதிய எரிபொருளைப் பயன்படுத்துவதால், கார்களை விட பழைய இருசக்கர வாகனங்களுக்கே (குறிப்பாக பைக்குகளுக்கு) அதிக ஆபத்து மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்?

எத்தனால் இயற்கையாகவே காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. பழைய பைக்குகளின் எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்பு E20 பெட்ரோலுக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை. இதனால், பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் எஞ்சின் உட்புறங்களில் அதிக அளவு துருப்பிடிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பைக்குகளில் உள்ள ரப்பர் குழாய்கள், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் கார்பரேட்டர்கள் எளிதில் சேதமடைகின்றன.

Continues below advertisement

ஆனால், கார்களின் எரிபொருள் அமைப்பு மற்றும் அதன் வடிவமைப்பு சற்றே மேம்பட்டதாகவும், மூடிய வகையிலும் பாதுகாப்பாக இருப்பதால் கார்களுக்குப் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, E20 பெட்ரோலால் கார்களை விட பழைய பைக்குகளுக்கே அதிக ஆபத்து உள்ளது.

மைலேஜ்மற்றும்ரேஞ்ச்பாதிப்பு

வழக்கமான பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் அடர்த்தி குறைவு. இதன் காரணமாக, E20 பெட்ரோலை பழைய பைக்குகளில் பயன்படுத்தும்போது அதன் மைலேஜ் கணிசமாகக் குறைகிறது. வாகனத்தின் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினாலும், அது செல்லும் மொத்த தூரம், முன்பை விடக் குறைந்துவிடுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

பழுதுபார்க்கும்செலவு

இந்த எரிபொருளால் பழைய பைக்குகளின் எஞ்சின் மற்றும் டேங்க் துருப்பிடிப்பதால், அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி மெக்கானிக் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாவதோடு, சேதமடைந்த உதிரிபாகங்களை மாற்றுவதற்கான விலை மற்றும் பழுது செலவுகள் வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் நிதிச் சுமையாக மாறியுள்ளது.

தற்போதைய புதிய பிஎஸ்-6 (BS6 OBD-2) வாகனங்கள் மட்டுமே E20 பெட்ரோலை ஏற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, பழைய பைக் உரிமையாளர்கள் தகுந்த எச்சரிக்கையுடனும் பராமரிப்புடனும் இருப்பது அவசியம்.


Car loan Information:

Calculate Car Loan EMI