Diesel Automatic Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும், நான்கு டீசல் ஆட்டோமேடிக் கார் மாடல்கள் குறித்து இங்கே அறியலாம்.
ரூ.15 லட்சம் பட்ஜெட் - டீசல் ஆட்டோமேடிக் கார்..!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எத்தனால் கந்த பெட்ரோல் விற்பனைக்கு முன்பாக, உள்ளூரில் டீசல் கார்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சந்தை நிலவரப்படி டீசல், மின்சார கார் மற்றும் சிஎன்ஜி எடிஷன்களுக்கு பொதுமக்களிடையேயான வரவேற்பு வேகமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஓட்டுவதற்கு எளிமையான மற்றும் பாராட்டுதலுக்குரிய மைலேஜின் கலவையாக கிடைக்கக் கூடிய டீசல் ஆட்டோமேடிக் கார்கள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. அந்த வகையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும் டீசல் ஆட்டோமேடிக் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் அலசி ஆராய்ந்ததில், பெரிய அளவில் அதில் பயனர்களுக்கான ஆப்ஷன்கள் இல்லை என்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.
டாப் 4 டீசல் ஆட்டோமேடிக் கார்..!
1. கியா சோனெட்
தென்கொரிய நிறுவனமான கியாவின் சோனெட்டானது இந்தியாவில் தற்போது மலிவு விலையில் கிடைக்கும் டீசல் ஆட்டோமேடிக் காராக உள்ளது. இந்த மாடலின் HTE(O) வேரியண்டிலிருந்து தொடங்கும் டீசல் ஆட்டோமேடிக் ட்ரிம்மின் விலை ரூ.11.92 லட்சமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆப்ஷன் 7 வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் 2 வேரியண்ட்களான GTX Plus & GTX Plus-ன் விலை டூயல் டோனில் 17 லட்சத்திற்கும் அதிகமான விலையை கொண்டுள்ளது.
சோனெட்டின் டீசல் ஆட்டோமேடிக் எடிஷனானது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இதோடு 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. இது பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட சிறந்த கார் மாடலில் ஒன்றாக உள்ளது. இந்த பிரிவில் மலிவு விலையில் கிடைத்தாலும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை காட்டிலும் மிகவும் மேம்படுத்தப்பட்ட டார்க் கன்வெர்டர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
2. டாடா நெக்ஸான்
டாடா தனது பெரும்பாலான மாடல்களில் பல்வேறு விதமான பவர்ட்ரெய்ன் தேர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது, நெக்ஸான் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். நெக்ஸானின் டீசல் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வரிசையானது, ப்யூர் ப்ளஸ் வேரியன்ட்டில் ரூ. 13 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. இதில் மொத்தம் 11 வேரியன்ட்கள் உள்ளன. இருப்பினும், க்ரியேட்டிவ் ப்ளஸ் (S) தொடங்கி ஃபியர்லெஸ் ப்ளஸ் டார்க் எடிஷன் வரையிலான முதல் ஆறு வேரியன்ட்களின் விலை ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய மிக உயர்ந்த அம்சங்கள் கொண்ட டீசல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) வேரியன்ட் கிரியேட்டிவ் ப்ளஸ் (S) ஆகும். நெக்ஸானின் டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்ன், 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் இன்ஜின் (114 bhp மற்றும் 260 Nm) மற்றும் 6 ஸ்பீட் AMT ஆப்ஷனை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
3. மஹிந்த்ரா XUV 3XO
மஹிந்த்ராவின் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி ஆன, XUV 3XO-வின் டீசல் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வரிசையானது, MX3 வேரியண்ட்டில் ரூ. 13.58 லட்சம் என்ற விலையில் தொடங்குகிறது, இதில் மொத்தமாக மூன்று வேரியண்ட்டுகள் கிடைக்கின்றன. இருப்பினும், இதன் டாப் வேரியண்ட்டான AX7 டூயல்-டோன், ரூ.16.5 லட்சத்திற்கும் அதிகமான விலையை கொண்டுள்ளது. XUV 3XO-வின் டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்ன், 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் இன்ஜின் (115 bhp மற்றும் 300 Nm) மற்றும் 6 ஸ்பீட் AMT ஆப்ஷனை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மஹிந்த்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.
4. ஹுண்டாய் வென்யு
15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் டீசல் ஆட்டோமேடிக் கார் என்ற பட்டியலில் அதிக தொடக்க விலையை கொண்ட கார் மாடலாக ஹுண்டாய் வென்யு திகழ்கிறது. இதன் டீசல் ஆட்டோமேட்டிக் வரிசையானது HX 5 வேரியண்ட்டில் ரூ. 14.47 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதில் மொத்தமாக ஏழு வேரியண்ட்டுகள் கிடைக்கின்றன. சுவாரஸ்யமாக, HX 5 தவிர மற்ற அனைத்து வேரியண்ட்டுகளும் ரூ. 16.5 லட்சத்திற்கும் அதிகமான விலையில் உள்ளன. வென்யுவின் டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்ன், 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் இன்ஜின் (114 bhp மற்றும் 250 Nm) மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 17.9 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI