December 2025 Car Sales: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இதுவரை இல்லாத அளவில், கடந்த 2025ம் ஆண்டில் டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்களும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
1. மாருதி சுசூகி
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 17 ஆயிரத்து 854 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு சந்தையில் விற்பனையானது இதுவரை இல்லாத புதிய உச்சமாக, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 165 யூனிட்களை எட்டியுள்ளது. மற்ற நிறுவனங்கள் சார்பில் உற்பத்தி செய்து 9 ஆயிரத்து 950 யூனிட்களை விற்பனை செய்ததோடு, வெளிநாடுகளுக்கு 25 ஆயிரத்து 739 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த ஓராண்டில் மட்டும் 23 லட்சத்து 51 ஆயிரத்து 139 யூனிட்களை மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 648 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் கார் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக நீடிக்கிறது. ப்ராண்டின் முதல் மின்சார காரான இ-விட்டாரா உட்பட, 18 கார் மாடல்களை 100 நாடுகளுக்கு 2025ம் ஆண்டில் மாருதி சுசூகி ஏற்றுமதி செய்துள்ளது. டிசையர் வேகன் - ஆர், எர்டிகா ஆகியவை நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களாக உள்ளன.
2. மஹிந்த்ரா & மஹிந்த்ரா
மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 50 ஆயிரத்து 946 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்த்தில் இந்த விற்பனையானது வெறும் 41 ஆயிரத்து 424 யூனிட்கள் மட்டுமே ஆகும். அதாவது 23 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 6 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களைவிற்பனை செய்து, ஒட்டுமொத்த ஆண்டு விற்பனையில் ஹுண்டாய் மற்றும் டாடா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. ஸ்கார்ப்பியோ, தார், பொலேரோ போன்ற மாடல்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டாடா மோட்டார்ஸ்
கடந்த டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 42 ஆயிரத்து 508 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2024ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 33 ஆயிரத்து 875 யூனிட்களாக மட்டுமே இந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனையை பார்த்தால், 5 லட்சத்து 87 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. நிறுவனம் தரப்பில் விற்பனையில் அசத்திய மாடல்களாக நெக்சான் மற்றும் பஞ்ச் திகழ்கிறது.
4. ஹுண்டாய்
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஹுண்டாய் நிறுவனம் 58 ஆயிரத்து 702 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2024ம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.6 சதவிகிதம் அதிகமாகும். அதன்படி, உள்நாட்டில் 42 ஆயிரத்து 416 கார் யூனிட்கள் விற்பனை செய்யப்பட, 16 ஆயிரத்து 286 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனமானது ஒட்டுமொத்தமாக சுமார் 5 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி, நிறுவனத்தின் சிறந்த மாடலாக க்ரேட்டா திகழ்கிறது.
5. டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 801 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய 2024ம் ஆண்டில் பதிவான 3 லட்சத்து 26 ஆயிரத்து 329 யூனிட்களை காட்டிலும், 19 சதவிகிதம் அதிகமாகும். குறிப்பாக கடந்த ஆண்டு விற்பனையில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 580 யூனிட்கள் உள்நாட்டிலேயே விற்பனையானவையாகும். இதனிடையே, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 39 ஆயிரத்து 333 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 5 ஆயிரத்து 176 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும்.ஒட்டுமொத்த விற்பனையை 2024ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிட்டால் 33 சதவிகிதம் அதிகமாகும். இன்னோவா ஹைக்ராஸ் ப்ராண்டின் சிறந்த விற்பனையாகும் கார் மாடலாக உள்ளது.
6. கியா
கியா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டை இந்திய சந்தையில் விற்பனையில் இதுவரை இல்லாத புதிய உச்சத்துடன் பூர்த்தி செய்துள்ளது. அதன்படி மொத்த கார் விற்பனை 280,286 யூனிட்களாக பதிவாகியுள்ளது. இது 2024 இல் விற்பனையான 245,000 யூனிட்களை விட 15% அதிகமாகும். இந்திய சந்தையில் அறிமுகமானதிலிருந்து எந்தவொரு டிசம்பரிலும் இல்லாத வகையில், கடந்த டிசம்பரில் புதிய உச்சமாக 18,659 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 2024 டிசம்பரில் 8,957 யூனிட்களுடன் ஒப்பிடும்போது இது 105% வளர்ச்சி ஆகும். சோனெட் மற்றும் செல்டோஸ் ஆகியவை விற்பனையில் ப்ராண்டின் சிறந்த கார்களாக உள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI