இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மிகவும் முக்கியமான கார் நிறுவனங்களில் ஒன்று Citroen. இந்த நிறுவனத்தின் மின்சார கார் eC3 X.

Continues below advertisement

eC3 X:

இந்த காரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த காரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

Continues below advertisement

1.  eC3 X Live - ரூபாய் 12.82 லட்சம்

2. eC3 X Live (O) - ரூபாய் 13.19 லட்சம்

3. eC3 X Shine - ரூபாய் 14.15 லட்சம்

இந்த காரில் 3 வேரியண்ட்கள் இருந்த நிலையில், 4வது வேரியண்டாக நேற்று e-C3X Extended 4வது வேரியண்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

330 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த 3 வேரியண்டிலும் 29.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியண்டாகவே இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட e-C3X Extended வேரியண்ட் 330 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

56 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 143 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த காரில் அதிகபட்சமாக 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 100 கிலோமீட்டர் வேகத்தை 6.8 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. 10 முதல் 80 சதவீத சார்ஜை டிசி சார்ஜில் 57 நிமிடங்களில் எட்டும் ஆற்றல் கொண்டது. 

சிறப்புகள்:

எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டிஆர்எல்எஸ், கருப்பு வெள்ளி நிற பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்யூவி காரான இந்த கார் 6 வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. நீலம், சாம்பல், கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் இந்த கார் உள்ளது. 

10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது.  முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டேஷ்கேம் வசதி உள்ளது. செளகரியமான கேபின் வசதி உள்ளது. டிக்கி வசதி 315 லிட்டர் வரை உள்ளது. கிளவ்பாக்ஸ், சென்டர் கன்சோல் ஸ்டோரேஜ், பாட்டில் ஹோல்டர்ஸ் வசதி உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது.

போட்டி:

ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. ஹை ஸ்பீட் அலர்ட் வசதி உள்ளது. டாடா டிகோர் இவி, மஹிந்திர 3எக்ஸ்யூஓ இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் திகழ்கிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI