The Citroen C3, தி சிட்ரான் சி3 காரை எஸ்யுவி என்று பெரும்பாலானோர் சொல்வதில்லை. இது ஹேட்ச்பேக் வகையறா கார் தான். ஆனால் அதன் லுக் எஸ்யுவி போன்று உள்ளது.
Citroen C3 உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட ஒரு நல்ல கையடக்க விலையில் கிடைக்கக்கூடியா க்ராஸ்ஓவர் காராக இருக்கும். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரையில் Citroen C3யும், Tata Punchம் போட்டி போடலாம். அதைப் பற்றி பார்க்கலாம்.
எது பெரியது?
Citroen C3, Tata Punch, இரண்டு கார்களில் எது பெரியது என்று ஒப்பிட்டுப் பார்ப்போம். Tata Punchன் நீளம் 3827 மில்லிமீட்டர், Citroen C3 3980 மில்லிமீட்டர். இருப்பினும் இந்தியாவுக்காகவே பிரத்யேகமாக விற்கப்படவுள்ள இந்தக் கார்களின் நீளம் குறிப்பாக எவ்வளவு என்பது தெரியவில்லை. இரண்டுமே ஹெட்லேம்ப் பொறுத்தவரையில் ஒரே மாதிரியாக உள்ளன. முகப்பைப் பார்த்தால் பஞ்ச் கொஞ்சம் அதிகமாகவே எஸ்யுவி தோற்றம் கொண்டிருக்கும். ரூஃப் ரெய்ல் தோற்றமும் எஸ்யுவி அமைப்பையே ஒத்துள்ளது. Tata Punch கிரவுண்ட் கிளியரன்ஸ் 187 மில்லிமீட்டரில் உள்ளது. Citroen C3யின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மில்லி மீட்டர் அளவில் உள்ளது.
உள் கட்டமைப்பு எப்படி?
The Punchல் 7inch தொடு திரை உள்ளது. கார் முழுவதும் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. க்ரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரியர் வியூவ் கேமரா ஆகியன இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் உள்ளது.
The Citroen C3ல் 10inch தொடு திரை உள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் இல்லை. மாறாக முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்.
The Punchன் வீல் பேஸ் 2445mm என்றளவில் உள்ளது. Citroen C3யின் வீல் பேஸ் சற்றே அதிகமாக 2540mm என்றளவில் உள்ளது. இரு கார்களையும் ஒப்பிடும் போது பஞ்ச்சில் இடம் அதிகமாக இருக்கிறது. இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எனக் கருதப்படுகிறது.
இன்ஜின்கள்:
The Citroen C3 இன்ஜினில் 1.2 3 சிலிண்டர் பெட்ரோல் அல்லது டர்போ பெட்ரோல் வெர்சனில் வருகிறது. 5-speed manual அல்லது 7-speed இரட்டை க்ளட்ச் யூனிட் உள்ளது.
The Punch இன்ஜினில் 1.2l பெட்ரோல் வெர்சன் மட்டுமே உள்ளது. AMT அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. Traction pro mode உள்ளது.
விலை என்ன?
The Punchன் விலை Rs 5.6 to Rs 8.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Citroen C3 விலை Rs 5.5 lakh ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி இப்போது ஆயத்தமாகிவிட்டீர்களா? Citroen C3, Tata Punch எதை வாங்கப்போகிறீர்கள்?
Car loan Information:
Calculate Car Loan EMI