இந்தியாவின் முக்கியமான கார் நிறுவனமாக வளர்ந்து வரும் நிறுவனம் சிட்ரோன். இவர்களது கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சிட்ரோன் நிறுவனத்தின் Citroen Basalt X காரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

Continues below advertisement

10 லட்சம் பட்ஜெட்:

Citroen Basalt X காரின் தொடக்க விலை ரூபாய் 9.75 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16.87 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 9 வேரியண்ட்கள் உள்ளது.  9 வேரியண்ட்கள் பட்டிலையும் கீழே காணலாம். 

வேரியண்ட்கள்:

Basalt X You 1.2 Petrol MT  - ரூபாய் 9.75 லட்சம்

Continues below advertisement

Basalt X Plus 1.2 Petrol MT - ரூபாய் 11.47 லட்சம்

Basalt X Plus 1.2 Turbo Petrol MT - ரூபாய் 13.76 லட்சம்

Basalt X Max 1.2 Turbo Petrol MT - ரூபாய் 15.05 லட்சம்

Basalt X Plus 1.2 Turbo Petrol AT - ரூபாய் 15.29 லட்சம்

Basalt X Max 1.2 Turbo Petrol MT Dual Tone - ரூபாய் 15.31 லட்சம்

Basalt X Max Turbo Petrol MT Dark Edition - ரூபா் 15.40 லட்சம்

Basalt X Max 1.2 Turbo Petrol AT - ரூபாய் 16.61 லட்சம்

Basalt X Max 1.2 Turbo Petrol AT Dual Tone - ரூபாய் 16.87 லட்சம்

இந்த விலை ஆன் ரோட் விலை ஆகும். 

மைலேஜ்:

இந்த காரில் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி 2 வேரியண்ட்கள் தவிர மற்ற 7 வேரியண்ட்களும் மேனுவல்லில் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த கார் 108 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.  

1.2 லிட்டர் என்ஏ மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இதுவாகும். டேஷ்போர்ட் வசதிகளும் சிறப்பாகவே இந்த காரில் அமைந்துள்ளது. இந்த கார் 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

சிறப்புகள்:

இதன் எஞ்ஜின் மிகவும் சுமூகமாக இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். மோசமான சாலைகளிலும் சிறப்பாக செல்லும் வகையில் சஸ்பென்சன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி கூபே ரக காரின் உட்தோற்றமும், வெளிப்புறத் தோற்றமும் வசீகரிக்கும் வகையில் உள்ளது. 205 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

இந்த காரில் வயர்லஸ் சார்ஜிங் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் வசதியும் இதில் உள்ளது. பிசிஏபி பாதுகாப்பு தரச்சான்றிதழில் 4 ஸ்டார் பெற்றுள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி கொண்டது. ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வசதி கொண்டது. டாடா கர்வ், எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI