கடந்த செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி, ஹியுண்டாய், மஹிந்திராவின் விவசாயப் பொருள்கள், எஸ்கார்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை சரிந்துள்ளது. அதே வேளையில் டாடா மோட்டார்ஸ், MG மோட்டார் இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர், ஸ்கோடா ஆட்டோ, டி.வி.எஸ் மோட்டார், அஷோக் லேய்லாண்ட் ஆகியவை அதிகமாக விற்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி நிறுவனத்தின் சுமார் 1.50 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை சரிந்து, சுமார் 66 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு வீட்டில் பயன்படுத்தப்படும் பயணிகள் வாகனங்களில் சுமார் 68 ஆயிரம் விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.52 லட்சம் இருந்தது.
ஹியுண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டில் விற்பனை செய்த 59.9 ஆயிரம் வாகனங்களின் எண்ணிக்கையில் இருந்து சுமார் 24 சதவிகிதச் சரிவைச் சந்தித்து, சுமார் 46 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வீடுகளுக்கு விற்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் 50 ஆயிரம் என்பதில் இருந்து குறைந்து 33 ஆயிரமாக மாறியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விவசாயப் பிரிவு டிராக்டர்களை உற்பத்தி செய்து, விற்று வருகிறது. கடந்த ஆண்டு 42 ஆயிரம் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 42 ஆயிரம் டிராக்டர்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 7 சதவிகிதச் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்கார்ட்ஸ் நிறுவனத்திலும் இதே போல கடந்த ஆண்டை விட, சுமார் 26 சதவிகிதச் சரிவு விற்பனையில் ஏற்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த ஆண்டு சுமார் 9 சதவிகிதச் சரிவைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் சுமார் 4.41 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து விற்ற பஜாஜ் ஆட்டோ, இந்த ஆண்டு சுமார் 4 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.
இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 1.71 லட்ச வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1.1 லட்சமாக இருந்தது. இந்த செப்டம்பர் மாதத்தில் வாகன விற்பனை சுமார் 21 சதவிகித உயர்வை எட்டியுள்ளது.
MG மோட்டார் இந்தியா நிறுவனம் உற்பத்தி தொடர்பான பிரச்னைகளைச் சந்தித்து வந்தாளும், கடந்த ஆண்டு 2537 வாகனங்களையும், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக 3241 வாகனங்களையும் விற்றூள்ளது. MG நிறுவனத்தின் எலக்ட்ரிக் SUV காரான ZS EV இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும் MG மோட்டார் இந்தியா அறிவித்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் சுமார் 14 சதவிகித உயர்வுடன் இந்த ஆண்டு, 9284 வாகனங்களை விற்றுள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறூவனம் கடந்த ஆண்டு 1312 வாகனங்களை விற்றிருந்தது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 3027 ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ள Kushaq வாகனம் என ஸ்கோடா நிறுவனத்தின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஸான் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 780 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2816 ஆக உயர்ந்துள்ளது. இந்தியளவிலான மொத்த விற்பனையில் சுமார் 459 சதவிகித உயர்வைப் பெற்றுள்ளதாக நிஸான் இந்தியா அறிவித்துள்ளது.
அஷோக் லேய்லாண்ட் நிறுவனம் சுமார் 12 சதவிகித உயர்வுடன், சுமார் 8787 வாகனங்களை இந்த செப்டம்பரில் விற்றுள்ளது. Medium and Heavy Commercial வாகன விற்பனையில் சுமார் 39 சதவிகித உயர்வை எட்டியுள்ளதாகவும் அஷோக் லேய்லாண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI