புதுச்சேரி: ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு,  நடுத்தர கார்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது என கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

புதுச்சேரியில் கார் விற்பனை அதிகரிப்பு 

ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் புதுச்சேரியில் நடுத்தர கார்களின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்.3ம் தேதி, டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டத்தில், GST ஜி.எஸ்.டி.,யில் இருந்த 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் இருந்த பழைய வரி விகிதங்களை நீக்கிவிட்டு, 5 சதவீதம், 18 சதவீதம் ஆகிய இருவிகித நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று முதல் புதிய ஜி.எஸ்.டி., வரிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் முன்பு 1000, சிசி இன்ஜின் கார்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி., ஒரு சதவீதம் செஸ் வரி இருந்தது. அதில் 11 சதவீதம் வரி குறைக்கப்பட்டதால், தற்போது இந்தவகை கார்களுக்கு 18 சதவீத வரியாக மாறியுள்ளது.

Continues below advertisement

1500 சிசி கொண்ட பெரிய கார்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. 17 சதவீதம் செஸ் வரி என மொத்தமாக 45 சதவீதம் வரி இருந்தது. இதில் 5 சதவீதம் வரி குறைக்கப்பட்டு 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் 1000,சிசி கார்களுக்கு ரூ.60 ஆயிரமும் , 1500, சிசி கார்களுக்கு 30 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. இந்த வரிக்குறைப்பால் நடுத்தர மக்களிடையே கார் வாங்கும் எண்ணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்..

370 கார்கள் வாங்குவதற்கு முன்பதிவு

அதையொட்டி ஜி.எஸ்.டி., வரி குறைந்ததால், கார் நிறுவனங்களும் ரூ.4 லட்சத்திற்குள் இருக்கும் சிறிய ரக கார்களின் விலையை  குறைந்து, கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில், இந்த மாதத்தில் மட்டும் நடுத்தர விலை உள்ள கார்கள் உள்பட 240 கார்கள் வாங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று மற்றொரு கார் நிறுவனத்தில் 130 கார்கள் வாங்குவதிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து விழா காலங்கள் வர உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் கார்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என கார் நிறுவன ஊழியர்கள் கூறுகின்றன.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்

நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 2 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரம் அதிக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.

வாகனங்கள்

  • சைக்கிள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக 1,000 3,500 ரூபாய் வரை விலை குறையும்.
  • ஆடம்பர கார்களை தவிர, 1,200 ‘சிசி’க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், விலை குறையும்.
  •  350 உட்பட்ட 'சிசி'க்கு இருசக்கர வாகனம் மீதான வரி, 28ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால், அதன் விலை ரூ.10,௦௦௦ முதல் ரூ.30,000 வரை குறையும்.

Car loan Information:

Calculate Car Loan EMI