Car Sale Feb 2026: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 63 ஆயிரத்து 331 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

Continues below advertisement

பிப்ரவரி மாத கார் விற்பனை விவரங்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் விற்பனை என்பது தொடர்ந்து சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதமும் பல நிறுவனங்களுக்கு நல்ல விற்பனை பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டாடா நிறுவனம் 35 சதவிகிதமும், ஹுண்டாய் நிறுவனம் 12. சதவிகிதமும், கியா நிறுவனம் 10. சதவிகிதமும், மஹிந்த்ரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 18 சதவிகிதமும், மாருதி நிறுவனம் 11.1 சதவிகிதமும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. யூனிட்கள் அடிப்படையில் மாருதி தொடர்ந்து முதலிடம் வகிக்க, ஹுண்டாய் இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது.

Continues below advertisement

விற்பனையில் அசத்திய டாப் 5 ப்ராண்ட்கள்

6. கியா குதூகலம்

தென்கொரிய நிறுவனமான கியா கடந்த பிப்ரவரி மாதத்தில் 27 ஆயிரத்து 610 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 25 ஆயிரத்து 26 யூனிட்களை விட 10.3 சதவிகிதம் அதிகமாகும். செல்டோஸ் மற்றும் சோனெட் ஆகிய கார் மாடல்கள் ப்ராண்ட் தரப்பில் அதிகம் விற்பனையான கார் மாடல்களாக உள்ளன. எஸ்யுவி, எம்பிவி மற்றும் மின்சார கார் என மொத்தம் 9 மாடல்கள் ப்ராண்ட் சார்பில் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னோவா ஹைக்ராஸ் ப்ராண்டின் விற்பனையில் முதன்மையான மாடலாக மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

5. டொயோட்டா பிப்ரவரி மாத விற்பனை:

டொயோட்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 34 ஆயிரத்து 34 யூனிட்கள் டொயோட்டா நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டிலேயே 30 ஆயிரத்து 737 யூனிட்கள் விற்பனையாக, 3 ஆயிரத்து 297 யூனிட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 28 ஆயிரத்து 414 யூனிட்களை காட்டிலும் 20 சதவிகிதம் அதிகமாகும். ஹேட்ச்பேக், செடான், எஸ்யுவி என மொத்தம் 12 கார் மாடல்கள் டொயோட்டா சார்பில் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.

4. மஹிந்த்ரா எஸ்யுவிக்கள்

மஹிந்த்ரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 97 ஆயிரத்து 177 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், அதில் 60 ஆயிரத்து 18 வாகனங்கள் மட்டுமே பயணிகள் வாகமனமாகும். இது கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் பதிவான 50 ஆயிரத்து 420 யூனிட்களை காட்டிலும் சுமார் 19 சதவிகிதம் அதிகமாகும்.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியானது 11 சதவிகிதம் அதிகரித்து 3 ஆயிரத்து 384 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.  கடந்த மாதத்தில் ப்ராண்டின் சார்பில் அதிகம் விற்பனையான மாடலாக ஸ்கார்பியோ ரேஞ்ச் திகழ்கிறது. எஸ்யுவி மற்றும் மின்சார கார்கள் என ப்ராண்ட் சார்பில் மொத்தம் 16 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

3. டாடாவின் விற்பனை விவரம்

டாடா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 63 ஆயிரத்து 331 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 46 ஆயிரத்து 811 யூனிட்களை காட்டிலும் 35 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. ப்ராண்ட் சார்பில் அதிகபட்சமாக நெக்ஸான் 19 ஆயிரத்து 430 யூனிட்களும், பஞ்ச் 18 ஆயிரத்து 748 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. செடான், ஹேட்ச்பேக், எஸ்யுவி மற்றும் மின்சார வாகனங்கள் என 15 முதல் 16 மாடல்கள் நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. 

2. ஹுண்டாய் கார் மாடல்கள் விவரம்

கடந்த சில மாதங்களாக விற்பனையில் சரிவை கண்டு வந்த ஹுண்டாய், பிப்ரவரி மாதத்தில் 66 ஆயிரத்து 134 யூனிட்களின் விற்பனையை எட்டியுள்ளது. உள்ளூரில் அறிமுகமானதிலிருந்து பிப்ரவரி மாதத்தில் ப்ராண்ட் சார்பில் பதிவான அதிகபட்ச விற்பனை இதுவாகும். உள்ளூரில் 52 ஆயிரத்து 407 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 13 ஆயிரத்து 727 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் பதிவானதை காட்டிலும் 12.6 சதவிகிதம் அதிகமாகும். க்ரேட்டா கார் மாடல் ப்ராண்டின் சிறந்த விற்பனையை பிப்ரவரியில் பதிவு செய்துள்ளது. ஹுண்டாய் 14 கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. 

1. மாருதி சுசூகி ஆதிக்கம்

மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மாதம் உள்ளூரில் மட்டும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 740 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியுடன் சேர்த்து ஒட்டுமொத்த விற்பனையானது 2 லட்சத்து 13 ஆயிரத்து 995 யூனிட்களை எட்டியுள்ளது. ப்ராண்டின் விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 11.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. டிசையர் கார் மாடல் கடந்த மாதம் ப்ராண்ட் சார்பில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. உள்ளூர் சந்தையில் மாருதி சுசூகி சார்பில் 19 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

விற்பனையில் அசத்திய டாப் 10 கார் ப்ராண்ட்கள்:

கார் மாடல் பிப்ரவரி மாத விற்பனை
டாடா நெக்ஸான் 19,430 யூனிட்கள்
மாருதி சுசூகி டிசையர் 19326 யூனிட்கள்
டாடா பஞ்ச் 18,748 யூனிட்கள்
ஹுண்டாய் க்ரேட்டா 17,938 யூனிட்கள்
மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா 17,863 யூனிட்கள்
மாருதி சுசூகி எர்டிகா 17,807 யூனிட்கள்
மாருதி சுசூகி வேகன்ஆர் 14,885 யூனிட்கள்
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 14,883 யூனிட்கள்
மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ (க்ளாசிக் + N) 14,665 யூனிட்கள்
மாருதி சுசூகி பலேனோ 14,632 யூனிட்கள்

Car loan Information:

Calculate Car Loan EMI