இந்தியாவில் சமீபகாலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் பிரபலமான மின்சார கார் நிறுவனமாக திகழ்வது BYD.

Continues below advertisement

BYD eMax 7:

BYD நிறுவனத்தின் முக்கியமான படைப்பு BYD eMax 7. இந்த காரின் மைலேஜ், தரம், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம். இந்த BYD eMax 7 காரின் தொடக்க விலை ரூபாய் 28.42 லட்சம். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 31.76 லட்சம் ஆகும். இந்த கார் 6 மற்றும் 7 இருக்கைகள் வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது. 

வேரியண்ட்கள்:

1. eMax 7 Premium 6 STR - ரூபாய் 28 லட்சத்து 42 ஆயிரம்

Continues below advertisement

2. eMax 7 Premium 7 STR - ரூபாய் 29 லட்சத்து 05 ஆயிரம்

3. eMax 7 Superior 6 STR - ரூபாய் 31 லட்சத்து 13 ஆயிரம்

4. eMax 7 Superior 7 STR - ரூபாய் 31 லட்சத்து 76 ஆயிரம்

இந்த விலைகள் அனைத்தும் ஆன் ரோட் விலை ஆகும். 

மைலேஜ் எப்படி?

இந்த கார்களில் 55.4 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்ட் மற்றும் 71.8 கிலோவாட் வேரியண்ட் கொண்ட கார்கள் உள்ளது. பட்டியலில் உள்ள முதல் 2  கார்கள் 55.4 கிலோவாட் பேட்டரி கொண்ட கார்கள். கடைசி 2 கார்கள் 71.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார்கள் ஆகும். 

eMax 7 Premium 6 STR மற்றும் eMax 7 Premium 7 STR வேரியண்ட் கார்கள் இரண்டும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 420 கிலோமீ்ட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. eMax 7 Superior 6 STR மற்றும் eMax 7 Superior 7 STR ஆகிய 2 கார்களும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 530 கிலோமீ்ட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

சிறப்புகள்:

இந்த காரில் 12.3 இன்ச் சுழலும் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.  161 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 310 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்கள் 7 சீட்டர். eMax 7 Premium 6 STR மட்டும் 6 இருக்கைகள் கொண்டது. 

இதில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதியுடன் உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. இந்த கார் வெள்ளை, நீலம், கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் உள்ளது. மஹிந்திராவின் எக்ஸ்இவி 9எஸ், மாருதி இன்விக்டோ, டொயோட்டோவின் இன்னவோ ஹைகிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் சந்தையில் உள்ளது. இந்த காரின் வசீகரமான தோற்றமும், உட்புற வசதிகளும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI