மேலும் அறிய

Citroen C5 Aircross: நல்ல எஸ்யுவி, தேறாத சிட்ரோயன் - C5 வாங்குனா C3 X இலவசம் என அறிவிப்பு - ரூ.11 லட்சம் மிச்சம்

Citroen C5 Aircross: சிட்ரோயன் நிறுவனத்தின் C5 Aircross கார் மாடலை வாங்கினால் ரூ.11 லட்சம் மதிப்பிலான எஸ்யுவி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Citroen C5 Aircross: சிட்ரோயன் நிறுவனத்தின் C5 Aircross கார் மாடலின் விலை ரூ.37.4 லட்சமாகும்.

சிட்ரோயன் அதிரடி அறிவிப்பு:

கோயம்புத்தூரில் உள்ள சிட்ரோயன் ப்ராண்டின் டீலரான SGA சிட்ரோயன், வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமான அதிரடியான சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ப்ராண்டின் C5 ஏர்க்ராஸ் கார் மாடலை வாங்குவோர், எந்த வித கூடுதல் கட்டணமும் இன்றி C3 X கார் மாடலை இலவசமாக பெறக்கூடும். குறுகிய காலத்திற்கான இந்த சலுகையானது கையிருப்பு உள்ள வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சிட்ரோயன் நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலாக விற்பனை செய்யப்படும், C5 ஏர்க்ராஸ் விலை ரூ.37.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

C5 ஏர்க்ராஸ் - இன்ஜின் விவரங்கள்:

ஃப்ளாக்‌ஷீப் கார் மாடலில் இடம்பெற்றுள்ள 2.0லிட்டர் 4 சிலிண்டர்  டீசல் இன்ஜின் ஆனது 177hp மற்றும் 400Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டார்க் கன்வெர்டர் செட்-அப்பை கொண்டுள்ள, ஒரே ஒரு 8 ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக லிட்டருக்கு 17.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ப்ரீமியம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் C5 ஏர்க்ராஸ் காரானது, ஹுண்டாய் டக்சன், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், டொயோட்டா ஃபார்ட்சுனர் மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

C5 ஏர்க்ராஸ் - வெளிப்புற டிசைன்

கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் மூலம் C5 ஏர்க்ராஸ் அப்க்ரேட் பெற்றது. செதுக்கப்பட்ட மூக்கு பகுதி,  இரட்டை எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், ஏர் இண்டேக்கிற்கான நம்பகமான விவரம், 18 இன்ச் வீல்கள், ப்ரொடெக்டிவ் ஸ்டைலிலான லோயர் ட்ரிம் மற்றும் ரெக்டேங்குலர் எல்இடி டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.  பேர்ல் ஒய்ட், பெர்லா நேரா ப்ளாக், குமுலஸ் க்ரே மற்றும் எக்ளிப்ஸ் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த கார் கிடைக்கிறது. 


Citroen C5 Aircross: நல்ல எஸ்யுவி, தேறாத சிட்ரோயன் - C5 வாங்குனா C3 X இலவசம் என அறிவிப்பு - ரூ.11 லட்சம் மிச்சம்

C5 ஏர்க்ராஸ் - உட்புற அம்சங்கள்

உட்புறத்தி இந்த எஸ்யுவி ஆனது 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் இண்டெர்ஃபேஸ் சப்போர்டிங் ஸ்மார்ட்போன் மிர்ரரிங் மற்றும் 12.3 இன்ச் ட்ரைவர் டிஸ்பிளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுபோக டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் க்ளாஸ் ரூஃப், ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் என பல தரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. 


Citroen C5 Aircross: நல்ல எஸ்யுவி, தேறாத சிட்ரோயன் - C5 வாங்குனா C3 X இலவசம் என அறிவிப்பு - ரூ.11 லட்சம் மிச்சம்

C3 X க்ராஸோவர் கார் எப்படி?

இந்நிலையில், தான் குறுகியாக சலுகையாக ப்ராண்டின் ஃப்ளாக்‌ஷீப் கார மாடலை வாங்கினால்,C3 X க்ராஸோவர் கார் மாடல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வலுவான அப்க்ரேட்களை பெற்றாலும் எளிய அணுகலுக்கான விலையை தக்கவைத்து கொண்டது. அதன்படி, புஷ்-பட்டன் இக்னீஷியன், ச்பீட் லிமிட்டிங் க்ரூஸ் கன்ட்ரோல், மல்டி-வியூ 360 டிகிரி கேமரா மற்றும் எல்இடி லைட்டிங் பேக்கேஜ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.  கேபினானது லெதரேட் ஃபினிஷ்ட் டேஷ்போர்ட், வயர்லெஸ் போன் கனெக்டிவிட்டி உடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீனை பெற்றுள்ளது.

பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி எய்ட், ஹில்-ஹோல்ட் ஃபங்க்சன்கள்,  டயர் ப்ரஷர் மானிட்டரிங் மற்றும் பெரிமீட்டர் அலாரம் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்டைலிங் அடிப்படையில் ப்ராண்டின் மிகவும் பழக்கமான பிளவுபட்ட விளக்கு டிசைன் மற்றும் 180 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது.  இன்ஜின் அடிப்படையில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டர்போ எடிஷனானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 10 நொடிகளில் எட்டும் திறன் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.4.95 லட்சத்தில் தொடங்கி ரூ.10.19 லட்சம் வரை நீள்கிறது.


Citroen C5 Aircross: நல்ல எஸ்யுவி, தேறாத சிட்ரோயன் - C5 வாங்குனா C3 X இலவசம் என அறிவிப்பு - ரூ.11 லட்சம் மிச்சம்

அதிரடியான சலுகைக்கான காரணம் என்ன?

கடந்த 6 மாதங்களில் சிட்ரோயனின் C5 ஏர்க்ராஸ் கார் மாடலின் 5 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. எனவே, விற்பனையை ஊக்குவிக்கும் விதமாகவும், கையிருப்பில் உள்ள யூனிட்களை வெளியேற்றும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே கவனத்தை பெறாமல் போக இந்த காரின் விலையும், ப்ராண்டிற்கு உள்நாட்டில் உள்ள மதிப்புமே ஆகும்.  இந்த காரின் ஆன் ரோட் விலையானது 45 லட்சத்தை கடந்து போகிறது. அதே விலைக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான டொயோட்டா ஃபார்ட்சுனர், ஜீப் மெரிடியன், எம்ஜி க்ளோஸ்டர் போன்ற கார்களை தேர்வு செய்ய முடிகிறது. 

இந்த போட்டியாளர்கள் C5 ஏர்க்ராஸை காட்டிலும் அதிக அம்சங்கள் மற்றும் வலுவான செயல்திறன் கொண்ட இன்ஜினை பெற்றுள்ளது. சிட்ரோயனின் 5 சீட்டரானது போட்டியாளர்களுக்கு ஈடாக நடைமுறைதன்மைக்கு உகந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதன் விளைவாகவே C5 ஏர்க்ராஸால் விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ப்ராண்டிற்கு மிக குறைவான சேவை நிலையங்களே இருப்பதோடு, விற்பனைக்கு பிறகான சேவையும் மோசமாக உள்ளது. இதன் காரணமாகவும் வாடிக்கையாளர்கள் இந்த சிட்ரோயனின் காரை தேர்வு செய்ய தயங்குகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ் காரை வாங்கினால், C3 X கார் இலவசமா?

ஆம், கோயம்புத்தூரில் உள்ள SGA சிட்ரோயன் டீலரிடமிருந்து C5 ஏர்க்ராஸ் காரை வாங்குபவர்களுக்கு, எந்த கூடுதல் கட்டணமும் இன்றி C3 X கார் மாடல் இலவசமாக வழங்கப்படும்.

சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ் காரின் விலை என்ன?

சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.37.4 லட்சமாகும்.

சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ் காரின் இன்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள் என்ன?

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இது 177hp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.5 கிலோமீட்டர் ஆகும்.

சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ் கார் மாடலின் விற்பனை ஏன் குறைவாக உள்ளது?

காரின் அதிக விலை, பிராண்டின் உள்நாட்டு மதிப்பு குறைவு, போட்டியாளர்களை விட குறைவான அம்சங்கள், மோசமான விற்பனைக்கு பிறகான சேவை மற்றும் குறைவான சேவை நிலையங்கள் போன்ற காரணங்களால் விற்பனை குறைவாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?
BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?
ரூ. 1 லட்சம் தள்ளுபடியில் Toyota urban cruiser hyryder.. இந்த சலுகை எப்போது வரை? மேலும் விலை, சிறப்பம்சங்கள் இதோ
ரூ. 1 லட்சம் தள்ளுபடியில் Toyota urban cruiser hyryder.. இந்த சலுகை எப்போது வரை? மேலும் விலை, சிறப்பம்சங்கள் இதோ
Bike Mileage Tips: பைக் மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? பெட்ரோலை சேமிக்க உதவும் 5 முக்கிய டிப்ஸ் இதோ
பைக் மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? பெட்ரோலை சேமிக்க உதவும் 5 முக்கிய டிப்ஸ் இதோ
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget