புதிய மோட்டர் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற இன்சூரன்ஸ் நேற்று முதல் அமலுக்கு வந்தாலும் வாகன விற்பனையாளர்களிடமும், வாடிக்கையாளர்களிடம் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் பம்பர் டூ பம்பர் 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் விதியை தற்காலிகாக நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
என்ன விதி?
நேற்று முதல் பம்பர் டூ பம்பர் என்ற 5 ஆண்டுகளுக்கான இன்சூரன்ஸ் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றில்விசாரணை செய்த நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்த வேண்டும். இந்த இன்சூரன்ஸ் 5 ஆண்டுகளுக்கானதாக இருக்க வேண்டும். செப்டம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குன் அதன் மதிப்புக்கு ஏற்ப 5 ஆண்டுகளுக்கான இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.
யாருக்கெல்லாம் இதில் பயன்?
வாகன உரிமையாளர், டிரைவர், பயணி மற்றும் பயணியோடு பயணிப்பவர் ஆகியோர் இந்த இன்சூரன்ஸின் கீழ் வருவார்கள். விபத்தில் பாதிக்கப்படும் வாகனத்துக்கும், அதனால் பாதிப்பு ஏற்படுபவருக்கும் இந்த காப்பீடு உறுதியாகும். மேலும் தாமதமின்றி வெகு விரைவாக இழப்பீடு கிடைக்கவும் இந்த புதிய விதி உதவும்
என்ன சிக்கல்?
நீதிமன்றம் திடீரென இன்சூரன்ஸ் தொடர்பான உத்தரவிட்டாலும் இதனை உடனே அமல்படுத்துவது சிக்கலான காரியம் என தெரிவித்தது பொது காப்பீட்டு கவுன்சில். இதனை முறைப்படுத்த தங்களுக்கு 3 மாதங்கள் தேவை என்றும் நீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்த நீதிபதி, தன்னுடைய பழைய அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக, 5 ஆண்டு இன்சூரன்ஸ் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அறிவிப்பாக வெளியிட்டது அரசு போக்குவரத்து துறை. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியது போக்குவரத்துத் துறை.
நீதிமன்றமும், அரசும் உடனடி நடவடிக்கை எடுத்துவிட்ட நிலையில் வாகன விற்பனை செய்யுமிடத்திலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் குழப்பம் நிலவியது. இந்தக் குழப்பத்தால் ,நேற்று, மாநிலம் முழுவதும் புதிய வாகனப் பதிவு பாதிக்கப்பட்டது மற்றும் காப்பீட்டுத் திட்டத்தில் வாகன ஷோரூம்களில் தெளிவின்மை நிலவியது.
என்ன சொல்கிறார்கள்?
புதிய இன்சூரன்ஸ் விதி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேசிய வாகன விற்பனையாளர் ஒருவர், ''நீதிமன்றம் உத்தரவிட்டாலும், இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து எந்தவிதமான அறிவிப்பும் எங்களுக்கு வாவில்லை. பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் குறித்து அவர்கள் எங்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை. அதனால் வாகன ரிஜிஸ்டரின் போது செலவு அதிகமாக வரலாம் என நாங்கள் வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகிறோம் என்றார்.
புதிய இன்சூரன்ஸ் விதி குறித்து பேசிய வாடிக்கையாளர் ஒருவர், இந்த விதியால் வாகங்களில் விலை அதிகரிக்கும். நான் கார் வாங்க திட்டமிட்டேன். இப்போது அதன் இன்சூரன்ஸ் வழக்கமான தொகையை விட ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றார்.
இந்த புதிய விதியால் வாகனங்களில் விலை அதிகரிக்கும் என்பது உண்மை தான் என்றாலும், ஒருவேளை விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர்களுக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இன்சூரன்ஸ் அளவில் இது நன்மையை உண்டாக்கும் எனத் தெரிவிக்கிறார் வழக்கறிஞர் ஒருவர்.
Car loan Information:
Calculate Car Loan EMI