எஸ்யூவி கார் வாங்கும்போது, வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை மட்டும் பார்க்காமல், பூட் ஸ்பேஸும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் குடும்பங்களுக்கும், வாராந்திர ஷாப்பிங் செல்பவர்களுக்கும் இது மிகவும் அவசியம்.
உங்கள் பட்ஜெட் ரூ.15 லட்சம் என்றால், அதிக லக்கேஜ் வைக்கும் இடவசதி கொண்ட எஸ்யூவி கார்களின் பட்டியல் இங்கே:
கியாசைரோஸ் (Kia Siros)
ரூ.15 லட்சத்திற்குள் அதிகபட்சமாக 465 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்கும் கார் இது. இதன் பின்பக்க இருக்கைகளை முன்னும் பின்னும் நகர்த்தும் தனித்துவமான வடிவமைப்பு உள்ளதால், தேவைக்கேற்ப பயணிகளுக்கான லெக் ரூம் அல்லது லக்கேஜ் வைக்கும் பூட் ஸ்பேஸை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இதன் விலை ரூ.8.42 லட்சத்தில் தொடங்கி ரூ.15.82 லட்சம் வரை உள்ளது. கியா சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களுக்கு இடையில் உள்ள இது, குடும்பப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.
எம்ஜிஆஸ்டர், கியாசெல்டோஸ்
எம்ஜி ஆஸ்டர் 448 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. இதன் சதுர வடிவமைப்பு மற்றும் தட்டையான தளம் பொருட்களை எளிதாக ஏற்றவும் இறக்கவும் உதவுகிறது. இருப்பினும், பின்பக்க சக்கரங்களின் வீல் ஆர்ச் சற்று உள்ளே நீண்டிருப்பதால் நீளமான பொருட்களை வைப்பது கடினம்.
அதேபோல கியா செல்டோஸ் 447 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. செல்டோஸின் ஆரம்ப நிலை மாடல்களின் விலை சுமார் ரூ.15 லட்சம் வருவதால், பட்ஜெட்டிற்கு ஏற்ப என்ட்ரி அல்லது மிட்-ஸ்பெக் வேரியண்ட்களை தேர்வு செய்யலாம்.
டாடாநெக்ஸான், மாருதிபிரெஸ்ஸா
ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் பிரபலமான டாடா நெக்ஸான் சுமார் 350 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. மாருதி பிரெஸ்ஸா 328 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் இப்பட்டியலில் குறைவாக இருந்தாலும், மாருதியின் நம்பகமான சர்வீஸ் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவிற்காக வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்க விரும்புகின்றனர்.
ஹூண்டாய்வென்யூ
புதிய ஹூண்டாய் வென்யூவின் பூட் ஸ்பேஸ் விவரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், பழைய மாடலை போல இதிலும் சுமார் 350 லிட்டர் அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் மறக்காதீங்க
பூட் ஸ்பேஸின் லிட்டர் அளவை வைத்து மட்டுமே முழுமையாக இடவசதியை மதிப்பிட முடியாது. வீல் ஆர்ச் அல்லது ஸ்பேர் டயர் காரணமாக அதிக லிட்டர் அளவுள்ள காரில் கூட இடவசதி குறையலாம். எனவே, கார் வாங்கும் முன் டீலர்ஷிப்பிற்கு நேரில் சென்று உங்கள் சூட்கேஸ் அல்லது பைகளை வைத்து சரிபார்ப்பது நல்லது. தேவைப்பட்டால் பின்பக்க இருக்கைகளை மடித்து பூட் ஸ்பேஸை அதிகரிக்கும் வசதி உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியது முக்கியம்.
Car loan Information:
Calculate Car Loan EMI