பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்  ரூ 45,099 விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 


மோட்டார் சந்தையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்தப்படியாக எலக்ட்ரிக் வாகனங்களின் வரத்து அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இருசக்கர மின்சார வாகன சந்தையில், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதர் 450 எக்ஸ், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டர்கள் முன்னதாகவே களம் இறங்கினாலும் அவைகளின் விலை என்னவோ சாமானிய மக்களுக்கானதாக இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. இந்த நிலையில்தான் பெங்களூர் ஸ்டார் அப் நிறுவனமான பவுன்ஸ் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்கூட்டர் குறித்தான விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


பெங்களூரை மையமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான பவுன்ஸ் இன்பினிட்டி E1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை  பேட்டரி வசதி இல்லாமல்  45,099 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே ஸ்கூட்டர் பேட்டரி வசதியோடு 68,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பேட்டரி இல்லாமல் வாகனத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், வாடகை அடிப்படையில் பேட்டரியை பயன்படுத்தும் வசதியை பவுன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது உங்கள் வண்டியில் இருக்கும் பேட்டரியின் சார்ஜ் தீரும் பட்சத்தில், சார்ஜ் நிரப்பப்பட்ட புதிய பேட்டரியை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நெட்வொர்க்கை  பயன்படுத்தலாம். 


இதனால் மின்சார ஸ்கூட்டரின் மின்சார செலவு குறையும் என சொல்லப்படுகிறது. மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டர், 2kWh லித்தியம் அயன் பேட்டரியை உள்ளடக்கியதுடன், 83  நிமீ டார்க்கை கொண்டுள்ளது. 


இதில் அமைக்கப்பட்டிருக்கும் பேட்டரியை 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும். இது மட்டுமன்றி ரிவர்ஸ் மோடு, ஸ்கூட்டரை குறிப்பிட்ட ஸ்பீடில் செலுத்த பிரத்யேக கன்ரோல்,  ஆண்டி தெப்ட் கன்ரோல் உள்ளிட்ட பல ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5 நிறங்களில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து டெலிவர் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க:



 


Car loan Information:

Calculate Car Loan EMI