எலக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒன்றான பவுன்ஸ் தனது புதிய இன்பினிட்டி மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் எக்ஸ்ஷோரும் விலையை பேட்டரியில்லாமல் 36,000 ரூபாயில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.




மேலும் பேட்டரியுடன் என்றால் அதன் விலையை 68,999 ரூபாயாக  நிர்ணயித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து பவுன்ஸ் நிறுவனம் டெஸ்ட் டிரைவுகளை தொடங்குகிறது. இன்றைய தினம் முதல் இந்த வாகனங்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.  499 ரூபாய் செலுத்தினால் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை வழங்கியுள்ள பவுன்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் 2022 ஆம் ஆண்டு முதல் இந்த ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.



 






5 வண்ணங்களில் களமிறங்க உள்ள இந்த ஸ்கூட்டர்களை Battery as - a Service வசதியின் கீழ் வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாமல் வாங்கலாம். புதிதாக களமிறங்க உள்ள இந்த ஸ்கூட்டர், மார்க்கெட்டில் மிகப் பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக். டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எலக்ட்ரிக், ஏதர் 450 எக்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் இந்த இன்பினிட்டி ஸ்கூட்டர் அவைகளுக்கு நெருக்கடியை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. 


 






 


மேலும் படிக்க: 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண


Car loan Information:

Calculate Car Loan EMI