BMW 7 Series: வெடிகுண்டே போட்டாலும் ஒன்னும் ஆகாது - உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் BMW 7 சீரிஸ் கார்

BMW 7 Series Protection: வெடிகுண்டு பாதிப்பையே தாங்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த, பிஎம்டபள்யூ 7 சீரிஸின் Protection கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

BMW 7 Series Protection: பிஎம்டபள்யூ 7 சீரிஸின் Protection காரில் குண்டு துளைக்காத வகையிலான, பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement

BMW 7 Series Protection கார் மாடல்:

பாதுகாப்பிற்கான கவச வசதிகளை கொண்ட சொகுசு கார்கள் மிகவும் முக்கியமானவை.  ஏனெனில் இந்த வகையிலான குண்டு துளைக்காத மற்றும் வெடிகுண்டு பாதிப்புகளையே தாங்கும் வசதியுடனான கார்கள், உலகின் மிக முக்கியமான தலைவர்கள் மற்றும் நபர்கள் பயணிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையிலான உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சொகுசு காராக, பிஎம்டபள்யூ நிறுவனத்தின் 7 சீரிஸின் புதிய படைப்பாக 'Protection' கார் மாடல் இந்திய சந்தையில் இறங்கியுள்ளது. அதுதொடர்பான பல்வேறு தகவல்கள் தற்போது வெளியகியுள்ளன. இந்த புதிய தலைமுறை காரானது  7 சீரிஸை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக 'Protection' எடிஷனானது இந்த நிலைக்கு இறுதியாக மாற்றப்படாமல்,  அடித்தளத்திலிருந்தே கவச வாகனமாக மட்டுமே  உருவாக்கப்பட்டுள்ளது.

”Protection” வாகன பாதுகாப்பு அம்சங்கள்:

ப்ரொடெக்ஷன் வாகனமானது எஃகை பயன்படுத்தி உட்புறத்திலிருந்து, வெளிப்புறம் வரையில் பாதுகாப்பான கட்டமைப்பைக் கொண்ட கவசமாக உள்ளது. உடல் மற்றும் கூரைகளில் கவச கண்ணாடிகள் கூடுதல் கவசங்களாக வழங்கப்பட்டுள்ளன. 7-சீரிஸ் ஃபிளாக்ஷிப் செடானை அடிப்படையாகக் கொண்டது.  பாலிஸ்டிக் எதிர்ப்பு மற்றும் 7.62x5Li R வெடிமருந்துகளிலிருந்து தீக்கு எதிரான VR9 பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, இந்த செடான் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது.

ட்ரோன் தாக்குதல் மற்றும் கைக்குண்டு தாக்குதல் பாதிப்பிலிருந்தும் பயணிகளை பாதுகாக்கிறது. எரிபொருள் டேங்க் ஏதேனும் துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டாலும், அதனால் ஏற்படும் ஓட்டையை தாமாகவே அடைத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கதவுகளை தானாக மூடுதல் மற்றும் திறப்பது, கூல் பாக்ஸ் மற்றும் நிலையான பொருத்தப்பட்ட போவர்ஸ் & வில்கின்ஸ் டயமண்ட் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் அடங்கும்.

Expensive EV Cars: இந்திய சந்தையில் விலையுயர்ந்த மின்சார கார்களின் பட்டியல்... டாப் 5 லிஸ்ட் இதோ..!

இன்ஜின் விவரங்கள்:

Protection கார் மாடலில் 4.4-லிட்டர் 8 சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.  இது 48V மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும் இது டர்னிங் சர்க்கிளைக் குறைக்கும் ஆக்டிவ் ஸ்டீயரிங்கை கொண்டுள்ளது. கவச வாகனம் என்று வந்து விட்டால் அதன் சக்கரங்கள் மற்றும் டயர்களும் முக்கியமானவை ஆகும். அதன்படி, இதில் 20-இன்ச் சக்கரங்கள் மற்றும் சிறப்பு PAX டயர்களைக் கொண்டுள்ளன.  அவை வீல் ரிம்மில் ஒரு ரன் பிளாட் ரிங்கை கொண்டிருக்கும், அதாவது காரின் டயரில் காற்று குறைந்தாலும் மணிக்கு 80 கிமீ வேகத்தில் தொடர்ந்து ஓட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola