தற்போது இந்த வாகனத்திற்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த BMW எஸ் சீரிஸ் Facelift கார்கள் இந்திய சந்தையில் 530i எம் மாடல் ரூபாய் 62.90 லட்சத்திற்கும் 530 டி எம் ஸ்போர்ட் சுமார் 71.90 லட்சம் லட்சத்திற்கும் விற்பனையாகும். இந்த புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட், ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் வோல்வோ எஸ் 90 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 






1916ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்டது தான் பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 90வது ஆண்டு விழாவின்போது தான் இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவெடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 29 மார்ச் 2007 ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தொடங்கப்பட்ட அந்த ஆலையில் 10க்கும் அதிகமான BMW கார் வகைகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. BMW 3,5,6 மற்றும் 7 சீரிஸ் கார்கள் தொடங்கி X1,3 போன்ற ரக கார்களும் சென்னையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.






இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிஎம்டபிள்யூ S Series Facelift 2021 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என்று இரண்டு மாடல்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றது. நான்கு ஆப்ஷன்கள் கொண்ட காலநிலை கட்டுப்பட்டு கருவியுடன் 6 Air Bags கொண்ட மாடலாக உருவாகியுள்ளது. கடந்த 24ம் தேதி முதல் இந்த வாகனத்திற்கான புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் சில உதிரிபாகங்களுக்கு 50 சதவிகித தள்ளுபடியும் அறிவித்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.   


கடந்த சில மாதங்களாக பல முன்னனி கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்களுடைய பல முன்னனி எடிஷன் கார் மற்றும் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. செல்போன்கள், கார்கள் மற்றும் பைகளின் விற்பனை இந்த ஊரடங்கு காலத்திலும் உச்சம் தொட்டு வருவது நினைவுகூரத்தக்கது. 


Car loan Information:

Calculate Car Loan EMI