Diwali Offer Discount: தீபாவளி ஆஃபர்..5 லட்சம் வரை தள்ளுபடி - கியா, ஸ்கோடா, எம்ஜி, ஹுண்டாய் - அள்ளிக் கொடுத்த ப்ராண்ட்கள்
Diwali Offer Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விழாக்காலத்தை ஒட்டி, பல முன்னணி நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களுக்கு ரூ.5 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

Diwali Offer Discount: விழாக்காலத்தை ஒட்டி எந்தெந்த நிறுவனங்கள் எந்த மாடல்களுக்கு எவ்வளவு சலுகைகளை அறிவித்துள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
கார்களுக்கு விழாக்கால சலுகை
இந்தியாவில் விழாக்காலம் என்பது தொடங்கி வண்ணமயமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மக்களின் வாங்கும் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக, ஜிஎஸ்டி திருத்தத்துடன் விழாக்கால சலுகைகளையும் கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் அதிகப்படியான தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் மாதாந்திர தவணை சலுகைகளும் அடங்கும். இந்நிலையில், இந்த விழாக்கால சலுகையில் அதிகபட்ச தள்ளுபடி பெற்ற டாப் 10 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சலுகைகளானது நகரத்திற்கு நகரம் மற்றும் டீலர்களின் கையிருப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அதிக சலுகைகளை பெற்ற டாப் 10 கார்கள்:
10. கியா செல்டோஸ்
இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் சிறந்த போட்டியாளராக திகழும், கியாவின்செல்டோஸ் கார் மாடல் தற்போது 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை பெற்றுள்ளது. இதன் விலை 10.71 லட்சத்தில் தொடங்கி 19.81 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்வது குறிப்பிடத்தக்கது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன், பல வகையான ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளன. 22 வேரியண்ட்களை கொண்டுள்ள இந்த காரானது ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் மாருதி சுசூகியின் க்ராண்ட் விட்டாராவுடன் போட்டியிடுகிறது.
9. ஸ்கோடா கோடியாக்
ஸ்கோடா நிறுவனத்தின் ப்ரீமியம் எஸ்யுவி ஆன கோடியாக் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான சலுகையில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது ரூ.39.99 லட்சத்தில் தொடங்கி ரூ.45.96 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 2.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 7 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரானது, ஜீப் மெரிடியன் மற்றும் டொயோட்டா ஃபார்ட்சூனர் உடன் இந்திய சந்தையில் போட்டியிடுகிறது.
8. ஸ்கோடா ஸ்லாவியா/ குஷக்
ஸ்கோடா நிறுவனத்தின் பிரபலமான இரட்டையர்களான ஸ்லாவியா மற்றும் குஷக் கார் மாடல்கள் தற்போது, 2.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடிகளை பெற்றுள்ளது. ஸ்லாவிய கார் மாடல் தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.17.7 லட்சம் வரையிலும், குஷக் மாடல் 10.61 லட்சம் முதல் 18.43 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கார்களுமே 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பகிர்கிறது. உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார் மாடல்களுடன் ஸ்லாவியா மற்றும் குஷக் போட்டியிடுகின்றன.
7. MG ஆஸ்டர்
எம்ஜி நிறுவனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காம்பேக்ட் எஸ்யுவி ஆன ஆஸ்டர், தற்போது ரூ.2.57 லட்சம் வரை சலுகைகளை பெற்றுள்ளது. இதில் விழாக்கால மற்றும் மாதந்திர தவணை சலுகைகளும் அடங்கும். காரின் தற்போதைய விலை ரூ.9.65 லட்சத்தில் தொடங்கி 15.16 லட்சம் வரை நீள்கிறது. 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும்சிவிடி ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 10 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரானது, ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் கியா செல்டோஸ் கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
6. XUV400
மஹிந்திராவின் எலெக்ட்ரிக் காம்பாக்ட் SUV ஆன XUV400 , ரூ.2.95 லட்சம் வரை தள்ளுபடியை பெற்றுள்ளது. மின்சார வாகனத்திற்கு மாற விரும்புவோருக்கு கணிசமான சேமிப்பை வழங்குகிறது. இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் வரும் இந்த காரின் விலை ரூ.15.49-17.69 லட்சம் வரை நீள்கிறது. 34.5 kWh மற்றும் 39.4 kWh என்ற இரண்டு பேட்டரி எடிஷன்களுமே சிங்கிள் - ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரானது டாடா நெக்ஸான் EV க்கு நேரடி போட்டியாகும்.
5. MG ஹெக்டர்
அட்டகாசமான சாலை இருப்பு மற்றும் மிகப்பெரிய டச்-ஸ்க்ரீனுக்கு பெயர் பெற்ற MG ஹெக்டர், ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் பிரீமியம் அம்சங்களை கொண்ட காரின் அணுகல் மேலும் எளிதாகியுள்ளது. ரூ.14-21.42 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் இந்த காரானது, 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் கிடைக்கிறது. டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற கார் மாடல்களுடன் ஹெக்டர் போட்டியிடுகிறது.
4. ஃபோக்ஸ்வாகன் டிகுவான் R-லைன்
இந்திய சந்தையில் ரூ.45.73 லட்சம் விலையில் கிடைக்கும் பிரீமியம் எஸ்யுவி ஆனது, இப்போது ரூ.3 லட்சம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஃபோக்ஸ்வாகனின் டிகுவான் ஆர்-லைன் காரானது 7-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஆடம்பரமான கேபின் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனைத் தேடும் நபர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
3. ஜீப் க்ராண்ட் செரோகி
ஜீப் நிறுவனத்தின் பிரபலமான கிராண்ட் செரோகி இப்போது ரூ.3 லட்சம் வரை தள்ளுபடியுடன் மிகவும் அணுகக்கூடிய விலை வரம்பிற்குள் உள்ளது. ரூ.63 லட்சம் விலை கொண்ட இந்த காரானது இது 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. கிராண்ட் செரோகி வால்வோ XC60 மற்றும் ஆடி Q5 போன்ற சொகுசு SUV களுடன் போட்டியிடுகிறது .
2. MG க்ளோஸ்டர்
எம்ஜி நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலான க்ளோஸ்டர், ரூ.4 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை பெற்றுள்ளது. ரூ.38.33-43.16 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த காரானது 2.0 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முழு அளவிலான எஸ்யூவி டொயோட்டா ஃபார்ட்சூனர் மற்றும் ஸ்கோடா கோடியாக் உடன் நேரடியாக போட்டியிடுகிறது.
1. ஹுண்டாய் அயோனிக் 5
ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலானது ரூ.5.05 லட்சம் வரையிலான ஆச்சரியமூட்டும் தள்ளுபடியுடன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.46.30 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த மின்சார வாகனம், 72.6 kWh பேட்டரி பேக் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் கூடிய ஒற்றை ரியர் மவுண்டட் மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது கியா EV6 மற்றும் BYD சீல் ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட 10 மாடல்கள் மட்டுமின்றி ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் (ரூ. 2.15 லட்சம் வரை), ஜீப் காம்பஸ் (ரூ. 1.7 லட்சம் வரை) மற்றும் ஹோண்டா அமேஸ் (ரூ. 1.32 லட்சம் வரை) ஆகியவையும் கணிசமான பண்டிகை சலுகைகளைப் பெறுகின்றன. இதனால் மலிவு விலை ஹேட்ச்பேக்குகள் முதல் பிரீமியம் SUVகள் வரை அனைத்து பிரிவுகளிலும் வாங்குபவர்களுக்கு பண்டிகை காலம் ஒரு பொன்னான வாய்ப்பாக மாறியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















