EVA Solar Car: நாட்டின் முதல் சோலார் காரான Vayve Eva-வின் தொடக்க விலை, ரூ.3.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Vayve Eva கார் அறிமுகம்:
நடப்பாண்டிற்கான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ, டெல்லியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய கார்கள், உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள கார்கள், கான்செப்ட் வடிவங்கள் ஆகியவற்றை அறிமுகபப்டுத்தி வருகின்றன. அந்த வகையில் புனேவைச் சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நாட்டின் முதல் சோலார் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது சூரிய சக்தியில் இயங்கும் காரான Vayve Eva ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
காரின் விலை விவரங்கள்:
3 மீட்டர் நீளம் கொண்ட Vayve Eva காரின் தொடக்க விலை ரூ.3.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரைப் பொறுத்தவரை, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ வரை ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. Vayve Eva நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் வேரியன்டின் விலை ரூ.3.25 லட்சமாகவும், ஸ்டெல்லாவின் விலை ரூ.3.99 லட்சமாகவும், வேகா வேரியண்டின் விலை ரூ.4.49 லட்சமாகவும் உள்ளது.
1 கிலோமீட்டருக்கு எவ்வளவு செலவு?
Vayve Eva காரில் சோலார் பேனல் உள்ளது. இதனை காரின் சன்ரூஃப்புக்கு பதிலாக பயன்படுத்தப்படலாம். இந்த காரை 1 கிலோமீட்டர் ஓட்டுவதற்கான செலவு 80 பைசா மட்டுமே. இதனுடன், இது நாட்டின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார கார் இதுவென்றும் நிறுவனம் உரிமைகோரியுள்ளது.
Vayve Eva முன் ஒரு தனி இருக்கை மற்றும் பின்புறம் சற்று அகலமான இருக்கை உள்ளது. இந்த இருக்கை மிகவும் அகலமானது, ஒரு குழந்தை கூட பெரியவர்களுடன் எளிதில் அமர முடியும். மேலும், இதன் டிரைவிங் இருக்கையை 6 வழிகளில் சரிசெய்யலாம். இந்த சோலார் காரில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
Vayve Eva காரின் அம்சங்கள்:
காரின் மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது ஏசியுடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. காரின் நீளம் 3060 மிமீ, அகலம் 1150 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ. இந்த சோலார் காரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட காரின் டர்னிங் ரேடியஸ் 3.9 மீட்டர். காரின் அதிகபட்ச வேகத்தைப் பற்றி பேசினால், இது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. விரைவில் இந்த கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI