இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. 

Continues below advertisement

ஓலா, ஏதர் நிறுவனத்திற்கு போட்டியாக BGauss நிறுவனம் வளர்ந்து வருகிறது. BGauss நிறுவனத்தின் இ ஸ்கூட்டர் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1.BGauss C12:

இந்த BGauss C12 இ ஸ்கூட்டரில் 3 வேரியண்ட் உள்ளது. தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 989. டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரத்து 989. 2 மற்றும் 2.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் உள்ளது. குறைந்தபட்சமாக 85 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 123 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. கருப்பு, பச்சை, வெள்ளை, பச்சை வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் உள்ளது.

Continues below advertisement

ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 106 கிலோ எடை கொண்டது.

2.BGauss Oowah:

இந்த BGauss Oowah இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 99 ஆயிரத்து 489. இதில் 2 வேரியண்ட் உள்ளது. 2.3 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டது. இதன் விலை ரூபாய 99 ஆயிரத்து 489 மற்றும் ரூபாய் 1 லடசத்து 27 ஆயிரத்து 989. பச்சை, வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 97 கிலோ மற்றும் 104 கிலோ எடை கொண்டது.

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டபுள் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 

3. BGauss BG RUV 350:

இந்த BGauss BG RUV 350 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 989. ஒரு முறை சார்ஜ் செய்தால 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 75 கிலோமீ்ட்டர் வேகத்தில் செல்லலாம்.  வெள்ளை, கருஞ்சிவப்பு, சாம்பல், கருப்பு, கருநீலம் வண்ணங்களில் உள்ளது. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 122 கிலோ எடை கொண்டது.

வசதிகள்:

இந்த BGauss இ ஸ்கூட்டர்களில் ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், ஸ்டாண்ட் அலார்ம், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.  எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  


Car loan Information:

Calculate Car Loan EMI