Budget 7 Seater: குடும்பங்களுக்கான பட்ஜெட் 7 சீட்டர்..! மைலேஜ், அம்சங்கள், விலை ஒப்பீடு விவரங்கள் - எது பெஸ்ட் மாடல்?
Budget 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், குடும்பங்களுக்கான 7 சீட்டர் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், 7 சீட்டர் கார்களின் விவரங்கள் கீழே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.
பட்ஜெட் 7 சீட்டர் கார் மாடல்கள்:
குடும்பங்களாக பயணிப்பவர்கள் கரடுமுரடான எஸ்யுவிக்களை காட்டிலும், விசாலமான இடவசதியுடன் கூடிய கேபினை கொண்டுள்ள 7 சீட்டர் மாடல்களுக்கு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளனர். நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த 6 மற்றும் 7 இருக்கை கொண்ட மாடல்கள், தரமான பயணம் மற்றும் அதிகப்படியான லெக் ரூம் வசதி ஆகியவற்றும் எளிதில் அணுகக் கூடிய விலையிலேயே கிடைக்கிறது. அந்த வகையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் 7 சீட்டர் காரை வாங்க திட்டமிடுபவராக இருந்தால், உங்களுக்கு கிடைக்கக் கூடிய மலிவு விலை மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பணத்திற்கு நிகரான மதிப்பு, எரிபொருள் செயல்திறன் உள்ளிட்ட விவரங்கள் ஒப்பீடு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கியா காரென்ஸ் க்ளாவிஸ், நிசான் க்ராவைட் போன்ற அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளன.
15 லட்சம் பட்ஜெட்டிலான 7 சீட்டர்கள்:
1. மாருதி எர்டிகா
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த 7 சீட்டர் மாடலாக மாருதி எர்டிகா உள்ளது. விலை மற்றும் பயன்பாட்டிற்கு இடையேயான நடுநிலையை பூர்த்தி செய்கிறது. குறைந்த பராமரிப்பு மற்றும் அதிக மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றின் காரணமாக வாடகை மற்றும் தனிப்பயன் என இரண்டு பிரிவுகளிலும் எர்டிகா வலுவான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் கிடைப்பதோடு, தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட அதிக செயல்திறன் கொண்ட சிஎன்ஜி டேங்கரை கொண்டுள்ளது. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜும், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 26 கிலோ மீட்டர் மைலேஜும் கொண்டு, பிரிவின் மலிவு விலை கார் மாடலாக திகழ்கிறது. எர்டிகாவின் விலை ரூ.8.80 லட்சத்தில் தொடங்கி ரூ.12.94 லட்சம் வரை நீள்கிறது.
2. கியா காரென்ஸ் க்ளாவிஸ்
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட காரென்ஸ் கார் மாடலின் க்ளாவிஸ் வேரியண்டானது, பட்ஜெட் எம்பிவி மற்றும் லக்சரி வாகங்களுக்கு இடையேயான காலியிடத்தை நிரப்புகிறது. முன்னதாக 20 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களுக்கானதாக இருந்த அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் நிலையானது போன்ற அம்சங்களை, 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் காரென்ஸ் க்ளாவிஸில் வழங்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் பிரிவின் சிறந்த அகலத்தினை கொண்ட மாடலாகவும், மூன்றாவது வரிசை இருக்கையை ஒரே டச்சில் மடக்கும் வசதி போன்றவற்றையும் கொண்டுள்ளது. அம்சங்கள் அடிப்படையில் கியா கனெக்ட் 2.0 மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விலை ரூ.11.21 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. டொயோட்டா ரூமியன்
எர்டிகா ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட ரூமியோன், டொயோட்டாவின் புகழ்பெற்ற சேவை அனுபவத்தையும், சற்றே மேம்பட்ட முன்பக்கத் தோற்றத்தையும் வழங்குகிறது. எர்டிகாவின் நம்பகத்தன்மையை விரும்பி, அதே சமயம் டொயோட்டா பேட்ஜ் மூலம் நீண்ட உத்தரவாதக் காலங்களையும் விரும்புகிறவர்களுக்கு ரூமியன் சிறந்த தேர்வாக இருக்கும். எர்டிகாவுடன் ஒப்பிடும்போது, இது ஒரு தனித்துவமான பம்பர் வடிவமைப்பையும் வேறுபட்ட உட்புற இருக்கை உறைகளையும் கொண்டுள்ளது. 1.5L நியோ டிரைவ் இன்ஜினைப் பகிர்ந்துகொள்வதால், மென்மையான மற்றும் நேர்த்தியான ஓட்டுநர் அனுபவம் உறுதி செய்யப்படுகிறது. இதன் விலை வரம்பு ரூ.9.55 லட்சம் – ரூ. 13.86 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. நிசான் கிராவைட்
வெகுஜன சந்தைக்கான 7 இருக்கைகள் கொண்ட கார் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிசானின் முயற்சியே கிராவைட் ஆகும். தொழில்நுட்ப ரீதியாக ஏழு பேர் அமரக்கூடிய, இந்தியாவில் உள்ள மிகவும் மலிவு விலைக் கார்களில் இதுவும் ஒன்றாகும். இதனால், குறைந்த பட்ஜெட்டைக் கருத்தில் கொள்ளும் நகர்ப்புறக் குடும்பங்களுக்கு இது மிகவும் பிடித்தமான தேர்வாக உள்ளது. நகரத்தின் குறுகலான இடங்களில் எளிதாக நிறுத்தக்கூடிய, கச்சிதமான MPVக்கான தோற்றத்தை கொண்டுள்ளது. ரூ.5.65 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டு ரெனால்ட் டிரைபருக்கு நேரடிப் போட்டியாளராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிக SUV-பாணியிலான வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் விலை வரம்பு ரூ.5.65 லட்சம் – ரூ.9.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ரெனால்ட் ட்ரைபர்
tரைபரின் “ஈஸிஃபிக்ஸ்” இருக்கைகள், மூன்றாவது வரிசையை முழுவதுமாக அகற்ற அனுமதிப்பதன் மூலம், அதனை 7 இருக்கைகள் கொண்ட காரிலிருந்து 5 இருக்கைகள் கொண்ட காராகவும், பிரம்மாண்டமான 625 லிட்டர் இடவசதி கொண்ட வாகனமாகவும் மாற்றுகிறது. இந்த மாடுலாரிட்டி, இதனை இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த சிறிய காராக மாற்றுகிறது. விலை மலிவானதாக இருந்தாலும், இது தொடர்ந்து 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று, குடும்பத்தினருக்கு ஒரு நம்பகமான தேர்வாக விளங்குகிறது. நகரப் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், அதிக எரிபொருள் சிக்கனத்திற்காகவும் ட்யூன் செய்யப்பட்ட 1.0L இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை வரம்பு ரூ.5.81 லட்சம் – ரூ.8.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை வரம்பை கொண்டுள்ளது.
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்






















