இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 125 சிசி முதல் 350 சிசி வரையிலான பிரிவில், வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு ஏற்ற சிறந்த மதிப்பையும், செயல்திறனையும் வழங்கும் பைக்குகளின் சிறப்பம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

125cc பிரிவு (தினசரி பயன்பாட்டுக்கு உகந்தவை)

  • மாடல்கள்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R (Hero Xtreme 125R) மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider), ஹோண்டா SP 125
  • டிசைன் மற்றும்வடிவமைப்பு: ஸ்போர்ட்டியான தோற்றம், எல்.இ.டி ஹெட்லைட், மஸ்குலர் பெட்ரோல் டேங்க், ஸ்பிளிட் சீட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.
  • மைலேஜ்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R லிட்டருக்கு 66 கி.மீ மைலேஜும், டிவிஎஸ் ரைடர் லிட்டருக்கு 67 கி.மீ மைலேஜும் வழங்குகின்றன.
  • எடை குறைவு என்பதால், எளிதில் வண்டியை கையாள முடியும், டிராஃபிக்கில் நீந்திச் செல்ல முடியும்.

150cc - 160cc பிரிவு (செயல்திறன் மற்றும் மைலேஜ் கொண்டவை)

    • மாடல்கள்: பஜாஜ் பல்சர் N160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, யமஹா MT-15. 
    • டிசைன்மற்றும்வடிவமைப்பு: அக்ரஸிவ் ஸ்ட்ரீட்ஃபைட்டர் டிசைன், ஏரோடைனமிக் பேனல்கள், எல்.இ.டி ப்ராஜெக்டர் ஹெட்லேம்ப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பிற்கான ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
    • மைலேஜ்: தினசரி பயன்பாடு, வார இறுதிப் பயணங்களுக்கு ஏற்றவாறு இந்த பைக்குகள் லிட்டருக்கு 45 முதல் 50 கி.மீ வரை மைலேஜ் வழங்கும்.

200cc - 250cc பிரிவு (ஸ்போர்ட்ஸ் செயல்திறனுக்கு)

  • மாடல்கள்: பஜாஜ் பல்சர் NS200, சுஸுகி ஜிக்ஸர்
  • டிசைன்மற்றும்வடிவமைப்பு: நேக்கட் ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு, உறுதியான பெர்மீட்டர் ஃபிரேம், கையாளுவதற்கு எளிதான ஹேண்டில்பார் மற்றும் அகலமான டயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
  • மைலேஜ்: சிறந்த ஸ்போர்ட்ஸ் செயல்திறனுடன் லிட்டருக்கு 35 முதல் 40 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும்.

350cc பிரிவு (க்ரூஸர் மாடல்களுக்கு)

  • மாடல்கள்: ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹண்டர் 350, ஹோண்டா CB 350 
  • டிசைன்மற்றும்வடிவமைப்பு: ரெட்ரோ கிளாசிக் வடிவமைப்பு, வட்ட வடிவ எல்.இ.டி ஹெட்லேம்ப், டியர்-டிராப் பெட்ரோல் டேங்க், சௌகரியமான அகலமான இருக்கைகள் மற்றும் அனலாக்-டிஜிட்டல் மீட்டர் ஆகியவை இதன் வடிவமைப்பை மேம்படுத்துகின்றன.
  • மைலேஜ்: நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற இந்த பைக்குகள் லிட்டருக்கு 35 கி.மீ வரை மைலேஜ் வழங்குகின்றன. 

Continues below advertisement

Car loan Information:

Calculate Car Loan EMI