Car Safety Accessories: பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு காரிலும் இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் சாதனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

கார் பாதுகாப்புக்கான அம்சங்கள்:

இலக்கை பாதுகாப்பாக அடைவது, சாலையில் ஏற்படக்கூடிய சூழலை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது போன்ற காரின் முக்கியமான பயன்பாட்டை,  அண்மைக்காலமாக அதிவேகம் எனும் அம்சம் மறந்துபோக செய்துள்ளது. இந்த சூழலில் குறிப்பாக இந்திய சாலைகளில், தங்களது காரின் பாதுகாப்பு அம்சங்களை நம்பி உயிரை பணையம் வைப்பது என்பது மிகவும் ஆபத்தான முடிவாக இருக்கும். இங்கு போக்குவரத்து என்பது கணிக்க முடியாததாக உள்ளது மற்றும் நீண்ட நெடிய சாலைகளில் கூட திடீரென பெரிய பள்ளங்கள் உயிருக்கு ஆபத்தானதாக அமைகின்றன.  எனவே ஸ்மார்ட் கார் அக்செசரிஸ் என்பது ஒரு கூடுதல் அம்சங்களாக இல்லாமல், பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாய தேவையாக மாறியுள்ளது. இதன் மூலம் அச்சமின்றி வாகனத்தை ஓட்ட முடியும். 

Continues below advertisement

கார்களுக்கான அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்கள்:

  • சாலைகளில் ஏற்படும் அனைத்து அசைவுகளையும் பதிவு செய்வதற்கும், விபத்துகள் அல்லது வாய்மொழி தகராறுகளின் போது முக்கிய ஆதாரங்களை உருவாக்குவதற்கும் கார்களில் இடம்பெற வேண்டிய முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்றாக டேஷ் கேமரா உள்ளது.
  • இறுக்கமான நகர்ப்புறங்களில் தெரிவுநிலையை விரிவுபடுத்துவதில் பிளைண்ட் ஸ்பாட் மிர்ரர் மற்றும் பார்க்கிங் சென்சார் மிகவும் அவசியமாக உள்ளன
  • உயர்தர LED அல்லது ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் இரவு நேர பயணத்திற்கான தெளிவை வழங்குகின்றன. குறைந்த பார்வை திறன் பிரச்னைக்கு தீர்வாக உதவுகிறது
  •  செயலிழந்த டயர் ஆபத்தானதாக மாறுவதற்கு முன்பு அதனை அறிய டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் எப்போதும் உதவும்
  • சிறிய முதலுதவி கருவிகள் அவசரநிலைகளைச் சமாளிக்கத் தயாராக இருப்பதை உறுதி செய்யும்
  • சீட் பெல்ட் அட்ஜெஸ்டர்ஸ் அல்லது வசதியான மெத்தைகள் போன்ற சில சிறிய அம்சங்கள் கூட சோர்வைக் குறைக்கின்றன, இதனால் மறைமுகமாக விபத்துகளுக்கான வாய்ப்புகள் குறையும்.  ஏனெனில் நெடிய பயணங்களின் போது நீண்ட நேரம் நீடிக்கும் அசவுகரியங்கள் கூட அசம்பாவிதங்களுக்கு காரணமாகலாம்.

பாதுகாப்பிற்கான டெக் கேஜட்ஸ்

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வருகை கார் பாதுகாப்பில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதன்படி,

  • ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேக்கள் (HUDகள்) முக்கியமான ஓட்டுநர் தகவல்களை நேரடியாக ஓட்டுநரின் விண்ட்ஷீல்டில் செலுத்தி, அவரது கவனத்தை சாலையில் செலுத்த உதவுகின்றன
  • செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ரியர்வியூ மிரர் ஸ்மார்ட் சென்சார்கள் லேன் டிபார்ட்சுர், சடன் பிரேக்கிங் மற்றும் வாகனங்கள் அருகில் வருவது குறித்து எச்சரிக்கும், இதனால் விபத்தைத் தவிர்க்கலாம்.
  • ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்ட ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கட்டளைகளுடன் கூடிய அம்சங்கள், ஓட்டுநருக்கு கவனச்சிதறல் இல்லாமல் நேவிகேஷன் மற்றும் இசை அணுகலை வழங்குகின்றன. இவை கட்டளையை மையப்படுத்தவும் வாகனத்தை ஓட்டுனர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது.

உசுரு முக்கியம் பாஸ்

பாதுகாப்பு உபகரணங்கள் கூடுதல் அம்சங்கள் என்பதை விட அதிகமானதாகும். உண்மையில், அவை உங்கள் வாழ்க்கை மற்றும் அமைதிக்கான முதலீடாகும். டேஷ்கேம், பார்க்கிங் உதவி, AI மூலம் இயங்கும் தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும் இந்திய சாலைகளில் விழிப்புணர்வு, ஆறுதல் மற்றும் பாதுகாப்பை உருவாக்கும். சரியான முன்னெச்சரிக்கைகளுடன் பயணிப்பது என்பது பாதுகாப்பானது, புத்திசாலித்தனமானது மற்றும் மிகவும் நம்பிக்கையானது என்பதை உறுதி செய்யும். 


Car loan Information:

Calculate Car Loan EMI