இளைஞர்களின் விருப்பமான ஸ்போர்ட்ஸ் பைக்கான பல்சர் RS200 பல நவீன அப்டேட்களுடன் புதிய எடிஷனாக அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.98 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சமீபத்தில் பல்சர் NS200 மாடலில் வழங்கப்பட்ட அதே நவீன தொழில்நுட்பங்கள், தற்போது RS200 பைக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எலக்ட்ரானிக் த்ராட்டில் பாடி, ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் குயிக்ஷிஃப்டர் ஆகியவை இந்த பைக்கின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளன. இந்தப் புதிய அம்சங்களால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 17,000 அதிகரித்துள்ளது.

அதிகரித்த இன்ஜின் பவர் 

புதிய 2026 பல்சர் RS200 பைக்கில் அதே 199.5சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள Electronic Throttle Body காரணமாக இன்ஜின் திறன் 1hp அதிகரித்து, இப்போது 25.5hp பவரை வெளிப்படுத்துகிறது. டார்க் அளவில் எந்த மாற்றமும் இன்றி 18.7Nm-ஆகவே தொடர்கிறது. மேலும், ரைடர்களின் வசதிக்கேற்ப பல்வேறு ரைடு மோட்கள், பாதுகாப்பிற்கான டிராக்ஷன் கண்ட்ரோல்  மற்றும் கியர் மாற்றத்தை எளிதாக்கும் குயிக்ஷிஃப்டர் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement

கூகுள் மேப்ஸ் வசதியுடன் புதிய 5-இன்ச் TFT திரை

பழைய மாடலில் இருந்த LCD மீட்டருக்கு விடைகொடுத்துவிட்டு, 5-இன்ச் அளவிலான நவீன TFT டிஜிட்டல் கன்சோலை பஜாஜ் இதில் பொருத்தியுள்ளது. இதன் முக்கியச் சிறப்பம்சமே இதில் உள்ள Google Maps Mirroring வசதிதான். இதன் மூலம் பயணத்தின் போது வழித்தடங்களை பைக்கின் திரையிலேயே எளிதாகப் பார்க்க முடியும். இத்துடன், கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளக்கூடிய லீவர்கள், USB டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஹசார்ட் ஸ்விட்ச் ஆகியவையும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

 USD சஸ்பென்ஷன்

பைக்கின் கையாளுமை  மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் விதமாக, சஸ்பென்ஷன் அமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இருந்த பாரம்பரிய டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளுக்குப் பதிலாக, தற்போது 37mm அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்ஜின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் என அனைத்திலும் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பைக்கிற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தையும் சிறப்பான ஓட்டும் அனுபவத்தையும் தருகின்றன.

எந்த பைக் எல்லாம் போட்டி?

ரூ. 17,000 விலை உயர்வுக்குப் பிறகு, 2026 பஜாஜ் பல்சர் RS200-ன் விலை ரூ. 1.98 லட்சமாக உள்ளது. 200சிசி ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் இதன் நேரடிப் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, ஹீரோ கரிஸ்மா ரூ. 1.86 லட்சமாகவும், 2026 பஜாஜ் பல்சர் RS200 ரூ. 1.98 லட்சமாகவும் கேடிஎம் RC 200 ரூ. 2.33 லட்சமாகவும் உள்ளது.அதாவது, கரிஸ்மா XMR-ஐ விட சற்று விலை அதிகமாக இருந்தாலும், கேடிஎம் RC 200-ஐ விட மிகவும் குறைவான விலையில் அதிக நவீன அம்சங்களைக் கொண்ட பைக்காகப் புதிய பல்சர் RS200 களமிறங்கியுள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI