ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
பஜாஜ் நிறுவனம் தன்னுடைய பல்சர் பைக்கிற்கு விழாக்கால தள்ளுபடியாக ரூபாய் 12 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வானக நிறுவனங்களில் ஒன்று பஜாஜ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக கருதப்படும் Pulsar பைக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.
பல்சர் தள்ளுபடி:
இந்த Pulsar பைக்கிற்கு விழாக்கால தள்ளுபடியை பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் Pulsar பைக்கில் Pulsar 125, NS125, Pulsar 150, N160 S/SS, NS160, N250, Pulsar 220F, RS200 மற்றும் NS400Z ஆகிய பல்சர் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்சர் பைக்கிற்கு ரூபாய் 12 ஆயிரம் வரை விழாக்கால தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 125 சிசி திறன் கொண்ட பைக் முதல் என்எஸ் 400 இசட் கேட்டகிரி வரையிலான பைக் அளித்துள்ளது.
1. Pulsar 125 - ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 2,500 - மொத்த தள்ளுபடி ரூபாய் 6 ஆயிரம்
2. NS 125 - ரூபாய் 2,500 ரொக்கத் தள்ளுபடி - மொத்த தள்ளுபடி ரூபாய் 6 ஆயிரத்து 200
3. Pulsar 150 - ரூபாய் 3 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - மொத்தமாக ரூபாய் 7 ஆயிரத்து 200
4. N160 S/SS - ரூபாய் 3 ஆயிரத்து 300 ரொக்கத் தள்ளுபடி - மொத்தமாக ரூபாய் 7 ஆயிரத்து 500
5. NS 160 - ரூபாய் 3 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - ரூபாய் 7 ஆயிரத்து 500 மொத்த தள்ளுபடி
6. Pulsar 220 - ரூபாய் 3 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - ரூபாய் 7 ஆயிரத்து 700 மொத்த தள்ளுபடி
7. N250 - ரூபாய் 3 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - ரூபாய் 7 ஆயிரத்து 900 மொத்த தள்ளுபடி
8. NS 200 - ரூபாய் 3 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - மொத்தமாக ரூபாய் 8 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி
9. RS 200 - ரூபாய் 3 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - மொத்தமாக ரூபாய் 8 ஆயிரத்து 900
10. NS400Z - ரூபாய் 5 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி - மொத்தமாக ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி
பல்சர் வசதிகள்:
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரொக்கத் தள்ளுபடியாக இந்த சலுகையை பல்சர் அறிவித்துள்ளது. வட இந்தியாவில் தசரா பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதால் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்தி அதிகளவில் வாகனம் வாங்க வருவார்கள் என்று பஜாஜ் நிறுவனம் வியூகம் வகுத்துள்ளது.
பஜாஜின் பல்சர் 125 மற்றும் 150 சிசி வேரியண்ட்களில் 5 இன்ச் டிஎஃப்டி கன்சோல் கூகுள் மேப் வசதி உள்ளது. எஞ்ஜின், கியர்பாக்ஸ், ஃப்ரேம், மோனோஷாக் சஸ்பென்சன் வசதி உள்ளது. பல்சர் என்160 எஸ்/எஸ்எஸ் தயாரிப்பில் 18.5 பிஎஸ் வசதி உள்ளது. 60 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டி விடுகிறது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல், ரைட் மோட் வசதிகள் உள்ளது. பல்சரில் உள்ள மற்ற வேரியண்ட்களில் ரைட் மோட், ஸ்போர்ட்ஸ் ஷிப்ட், ட்ராக்ஷன் கன்ட்ரோல் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















