இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் பஜாஜ். இவர்களின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனம் பல்சர். பல்சரின் பல்வேறு வேரியண்ட்களும், மாடல்களும் இந்திய சந்தையில் படுஜோராக விற்பனை அடைந்து வருகிறது. 

Continues below advertisement

Pulsar NS400Z:

இந்த சூழலில், பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய இரு சக்கர வாகனம் Pulsar NS400Z. இந்த பைக் 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரூம்ப் மற்றும் கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றத்திற்கு பிறகு இந்த இரு சக்கர வாகனம் அறிமுகமாவதால் இதன் விலை இதன் வழக்கமான விலையைக் காட்டிலும் ரூபாய் 24 ஆயிரத்து 500 குறைவாக இருக்கிறது.

விலை என்ன?

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்து 92. இதற்கு முன்பு 373.2 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் தற்போது வாடிக்கையாளர்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. க்யூக் ஷிப்டர், ட்ராக்ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி, ரேடியல் சக்கரங்கள், ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதிகள் உள்ளது.

Continues below advertisement

மைலேஜ்:

இந்த பைக் 6 கியர்களை கொண்டது. 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் எடுத்துள்ளது. 174 கிலோ எடை கொண்டது. 12 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வரை உள்ளது. 35 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 157 கிலோமீட்டர் வரை அதிகபட்ச வேகத்தில் செல்லலாம்.

1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டும். 384 கிலோமீட்டர் வரை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் செல்லலாம். ரோட், ரெயின், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஃப்ரோட் மோடில் உள்ளது. டிஸ்க் முன்பக்கமும், பின்பக்கமும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ், மோனோஷாக் அப்சார்ப்ர்ஸ் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மில்லி மீட்டர், 1.9 லிட்டர் ரிசர்வ் டேங்க் வசதி உள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. நேவிகேஷன் வசதி கொண்டது. 

எந்த கார் வாங்கினால் காசு மிச்சமாகும்? - சிஎன்ஜி vs ஹைப்ரிட் vs மின்சார கார்கள்!


Car loan Information:

Calculate Car Loan EMI