இந்தியாவின் மிகவும் முக்கியமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பஜாஜ் ஆகும். பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான படைப்பு Bajaj Pulsar NS160 பைக் ஆகும். இந்த பைக்கின் தரம், விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.
Pulsar NS160:
பஜாஜ் நிறுவனத்தின் Pulsar NS160 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரத்து 53 ஆகும். இந்த இரு சக்கர வாகனத்தில் 160.3 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. மற்ற பைக்கில் 4 கியர்கள் இருக்கும் நிலையில், இந்த பைக்கில் 5 கியர்கள் உள்ளது.
இந்த பைக்கின் எடை 152 கிலோ ஆகும். இந்த பைக்கின் டேங்கர் 12 லிட்டர் நிரப்பும் திறன் கொண்டது. இந்த பைக்கின் இருக்கை உயரம் 805 மி.மீட்டர் உயரம் கொண்டது. பிஎஸ் 6 ரகம் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. 17.03 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 14.6 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
மைலேஜ்:
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளது. ஆன்டி லாக்கிங் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. லிட்டருக்கு 52.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. டேங்க் நிரப்பினால் 624 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
இந்த பைக்கின் சிறப்பம்சமே இதன் வசீகரமான தோற்றமே ஆகும். இளைஞர்களை கவரும் தோற்றத்தில் இந்த பைக் உள்ளது. நகர்ப்புறங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு இந்த பைக் மிகவும் வசதியானதாக உள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 117 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.
வாரண்டி:
9 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 14.6 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதன் கியர் அமைப்பு பர்ஸ்ட் கியர் கீழேயும், அடுத்த 4 கியர் மேலயும் இருக்கும். ஆயில் கூல்ட் கூலிங் சிஸ்டம் கொண்டது. காலிபர் ப்ரண்ட் 2 பிஸ்டன் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடங்கள் வாரண்டி கொண்டது. 75 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி உள்ளது.
சிறப்புகள்:
இந்த பைக்கில் ப்ளூடூத் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர், பெட்ரோல் குறைவாக இருப்பதை எச்சரிக்கும் இண்டிகேட்டர், மணி பார்க்கும் வசதி, கால், மெசேஜ் அலர்ட் வசதி உள்ளது.
யுஸ்பி சார்ஜர் வசதி உள்ளது. மொபைல் ஆஃப் வசதி உள்ளது. லைவ் லோகேஷன் வசதி உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் அபேச் பைக்கிற்கு இந்த பைக் போட்டிாக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI