இந்தியாவில் மிகவும் முக்கியமான இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது பாஜக. இந்திய சாலைகளை ஆட்சி செய்யும் இரு சக்கர வாகனங்களில் பஜாஜ் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

Continues below advertisement

பஜாஜ் இ ஸ்கூட்டர்கள்:

இந்த சூழலில், மின்சார வாகனங்களின் தயாரிப்பில் பஜாஜ் நிறுவனமும் அசத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பஜாஜ் நிறுவனமும் மின்சார ஸ்கூட்டர் விற்பனையின் முன்னணியில் இருந்து வருகிறது. அவர்களின் இ ஸ்கூட்டர் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Bajaj Chetak:

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் Bajaj Chetak. இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. 3 கிலோவாட் பேட்டரியில் ஒரு வேரியண்டும், மற்ற 3 வேரியண்ட் 3.5 கிலோவாட் ஆகும். 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்டில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 153 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

Continues below advertisement

முதல் வேரியண்டில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். மற்ற 3 வேரியண்ட்களில் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். எகோ, ஸ்போர்ட் மோட்கள் உள்ளது. முதல் இரண்டு வேரியண்ட் ட்ரம் ப்ரேக், அடுத்த 2 வேரியண்ட் டிஸ்க் ப்ரேக் ஆகும். கருப்பு, சாம்பல், சிவப்பு, மஞ்சள், நீல வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. முதல் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து766க்கும், 2வது வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரத்து 785க்கும், 3வது வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 38 ஆயிரத்து 556க்கும், கடைசி வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 003க்கம் விற்கப்படுகிறது.

2. Bajaj Chetak C25:

பஜாஜ் நிறுவனத்தின் மற்றொரு இ ஸ்கூட்டர் Bajaj Chetak C25. இந்த இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 99 ஆயிரத்து 106 ஆகும். இதில் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 113 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

இந்த இ ஸ்கூட்டர் மஞ்சள், சாம்பல், கருப்பு, சிவப்பு, வெள்ள மற்றும் நீல வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. எகோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் விற்பனைக்கு வருகிறது. சிபிஎஸ் ப்ரேக்கில் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் வரை அளிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வசதி, எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதியுடன் உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி, ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்ரட் வசதி, ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI