இந்தியாவில் பைக்குகளுக்கு நிகராக ஸ்கூட்டர்களும் விற்பனையாகி வருகிறது. டிவிஎஸ், ஹோண்டா ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்கூட்டர்கள் விற்பனையில் அதிக வருவாய் கிடைக்கிறது. பஜாஜ் நிறுவனமும் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, இ ஸ்கூட்டர் தயாரிப்பில் ஒவ்வொரு நிறுவனமும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பஜாஜ் நிறுவனமும் இ ஸ்கூட்டர்  தயாரித்து வருகிறது.

Continues below advertisement

Bajaj Chetak C250:

பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த ஸ்கூட்டராக இருப்பது Bajaj Chetak C250. இந்த ஸ்கூட்டரில் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 114 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி67 பேட்டரி ரேட்டிங் வசதி உள்ளது. இதில் சிபிஎஸ் வசதி உள்ளது. எகோ மற்றும் ஸ்போர்ட் மோட் உள்ளது. இதன் ஆன்ரோட் விலை ரூபாய் 94 ஆயிரத்து 557 ஆகும்.

Continues below advertisement

மைலேஜ்:

இதில் சார்ஜ் செய்வதற்கு 3.45 மணி நேரம் ஆகிறது. ட்வின் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் வசதி முன்பக்கத்திற்கு உள்ளது. மோனோஷாக் சஸ்பென்சன் வசதி பின்சக்கரத்திற்கு உள்ளது. 108 கிலோ எடை கொண்டது. 170 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 3 வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி உள்ளது.

சிறப்புகள்:

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் கனெக்ஷன் ஆஃப்ஷனலாக உள்ளது. ஜிபிஎஸ் வசதி கிடையாது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இ ஸ்கூட்டரில் டிக்கி ஸ்டோரேஜ் 25 லிட்டர் ஆகும். சமமான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் மஞ்சள், சாம்பல், சிவப்பு, வெள்ளி, பச்சை என 6 நிறங்களில் இந்த ஸ்கூட்டர் உள்ளது. 

ஓலா, ஏதர் போன்ற பல இ ஸ்கூட்டர் நிறுவனங்களும் பல கிலோமீட்டர் மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர்களை பல திறன் கொண்ட பேட்டரிகளில் தயாரித்து வருகிறது. டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனமும் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறது.  மேலும், அதிக மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர் தயாரிப்பிலும் பஜாஜ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI