இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாதம் அதிகம் விற்பனையான கார் பட்டியலில் டாடா பஞ்ச் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹாட்ச்பேக் ரக கார்கள் அதிகம் விற்பனையாகும் ஒன்றாக இருந்தது. ஆனால், சமீப காலமாக பெரும்பாலானோர் எஸ்.யு.வி. ரக கார்கள் அதிகம் விற்பனையாகின்றனர். தரமான, வசதிகளுடன் உள்ள எஸ்.யு.வி.களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மார்ச் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் விவரம் வெளியாகியிருக்கிறது. அதில், அதிகம் விற்பனையாகும் கார்களில் முதலிடத்தில் டாடா பஞ்ச் (Tata Punch) உள்ளது. அதற்கடுத்து,ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா (Hyndai Creta)  2-வது இடத்திலும் மாருதி சுசூகியின் Wagon  R மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

ஹாட்ச்பேக், செடான் ரக கார்களுடன் ஒப்பிடுகையில் எஸ்.யு.வி. ரக கார்கள் பல்வேறு வசதிகளுடனும் தொழில்நுட்ப அப்க்ரேட்களுடன் கிடைப்பதால் பலரும் இதையே விரும்புகின்றனர். 

மார்ச் மாத கார் விற்பனை விவரம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயணிகள் வாகனங்கள் பிரிவில்  மார்ச் மாதத்தில் 3.7 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதத்தை விட இந்த மாதம் 0.8% விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. 2023-2024 நிதியாண்டில் மொத்தமாக 42.16 லட்சம் கார்கள் விற்பனையாகின்யுள்ளன. 

ரேங்க் கார் மாடல்

மார்ச்,2024

(யூனிட்கள்)

மார்ச்,2023

(யூனிட்கள்)

YoY (%)
1 டாடா பஞ்ச் 17,547 10,894 61%
2 ஹூண்டாய் கிரெட்டா 16,458 14,026 17%
3 மாருதி சுசூகி Wagon R 16,368 17,305 -5%
4 மாருதி டிசையர் 15,894 13,394 19%
5 மாருதி Swift 15,728 17,559 -10%
6 மாருதி பலேனோ 15,588 16,168 -4%
7 மாருதி ஸ்கார்பியோ 15,151 8,788 72%
8 மாருதி எர்ட்டிகா 14,888 9,028 65%
9 மாருதி ப்ரீசா 14,164 16,227 -10%
10 டாடா நெக்ஸான் 14,058 14,769 -5%

இந்தாண்டு மார்ச்-ல் டாடா பஞ்ச் 17,547 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. டாடா பஞ்ச் Internal Combustion Engines உடன் எலக்ட்ரிக் ரக கார்களும் இருக்கிறது. டாடா பஞ்ச் டீசல், எலக்ட்ரிக் கார்கள் இரண்டும் நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா 16,458 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. எஸ்.யு.வி. ரக கார் விற்பனை கடந்த ஆண்டை விட 17%அதிகரித்துள்ளது. அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார்களில் முதலிடத்தில் டாடா பஞ்ச் இடம்பெறுவது இதுவே முதன் முறை. 

அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்கள் பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆறு கார்கள் இடம்பெற்றுள்ளன. டாடா-வின் இரண்டு மாடல்களும் ஹூண்டாயின் ஒரு காரும் இடம்பெற்றிருக்கிறது.

ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்.யு.வி. கார்களுக்கு வரவேற்பு வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


 


Car loan Information:

Calculate Car Loan EMI