கொரோனா வைரஸ் தொற்றுநோய் வாகனத் தொழில்துறையை பயங்கரமாக உலுக்கியது. தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த துறையை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். இது வாகனத் தொழிலின் வலுவான மறுமலர்ச்சியின் அறிகுறியாகும்.  கடந்த சில மாதங்களாக வாகன தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FADA) சமீபத்தில் தெரிவித்தது.


FADA அறிக்கையின்படி, பயணிகள் வாகன விற்பனை 62.89 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 ஜூலையில் 1,60,681 யூனிட்டுகளாக இருந்த நிலைய்ல்,  2,61,744 யூனிட்டுகள் ஜூலை 2021ல் விற்கப்பட்டன. ஜூலை மாதம், வாகன நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வகை வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வாகன நிறுவனங்கள் அறிவித்தன.


Ola Scooter | ஓலா ஸ்கூட்டரை புக் செஞ்சீங்களா? ஒரு ஹேப்பி நியூஸ் - ஸ்கூட்டர் அறிமுக தேதி அறிவிப்பு..!


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது


FADA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பல்வேறு வகை வாகனங்களின் மொத்த விற்பனை 34.12 சதவீதம் அதிகரித்து 15,56,777 அலகுகளாக உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் சிறிய SUV பிரிவு கார்களுக்கு பெரும் தேவை உள்ளதாக FADA தலைவர் வின்கேஷ் குலாட்டி கூறியுள்ளார்.




கார் விற்பனை புள்ளிவிவரங்கள்


கடந்த மாதம், மாருதி சுசுகி 1,14,294 வாகனங்களை விற்பனை செய்தது. ஹூண்டாய் மோட்டார் 44,737 யூனிட் கார்களை விற்பனை செய்தது. டாடா மோட்டார்ஸ் மொத்தம் 24,953 வாகனங்களை விற்றது. மஹிந்திரா & மஹிந்திரா 16,326 வாகனங்களையும், கியா மோட்டார்ஸ் 15,995 வாகனங்களையும் ஜூலை மாதத்தில் விற்றுள்ளன. வணிக வாகன பிரிவு 165.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 52,130 வணிக வாகனங்கள் விற்கப்பட்டன. ஜூலை 2020 இல், வணிக வாகனப் பிரிவு 19,602 யூனிட்களின் விற்பனையை பதிவு செய்தது.


இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை


இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 11,32,611 இரு சக்கர வாகனங்கள் நாடு முழுவதும் விற்கப்பட்டன. இதுபோன்ற வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27.55 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை 2020 இல் மொத்தம் 8,87,937 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஹீரோ மோட்டோகார்ப் அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களை விற்றது. இந்நிறுவனம் இந்த ஆண்டு 4,01,904 வாகனங்களை விற்றுள்ளது. ஹோண்டா மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டர் என மொத்தம் 2,77,813 வாகனங்களை விற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார் 1,65,487 வாகனங்களை விற்றது. பஜாஜ் ஆட்டோ இந்த ஆண்டு 1,37,507 யூனிட்களை விற்றுள்ளது. சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் இந்த ஆண்டு 47,171 வாகனங்களை விற்றுள்ளது. கூடுதலாக, 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 27,904 முன்று சக்கர வாகனங்கள் விற்கப்பட்டன. இந்த பிரிவில் விற்பனை முந்தைய ஆண்டை விட 83.04 சதவீதம் அதிகரித்துள்ளது.


’அரை மணிநேரம் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் பயணம்!’ - விரைவில் அறிமுகமாகும் Simple One எலக்ட்ரிக் பைக்!


Car loan Information:

Calculate Car Loan EMI