இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் பல்வேறு இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவர்களின் TVS Apache RTR 310 பைக்கிற்கு என்று இந்தியாவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. 

Continues below advertisement

இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Apache RTR 310:

இந்த பைக்கின் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரத்து 556 ஆகும். இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. Apache RTR 310 Arsenal Black Base without QuickShifter - ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரத்து 556 

2. Apache RTR 310 Arsenal Black and Fury Yellow Base - ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரத்து 109

3. Apache RTR 310 Fiery Red Base - ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரத்து 353 

4. Apache RTR 310 Anniversary Special Edition -ரூபாய் 3 லட்சத்து 40 ஆயிரத்து 176

எஞ்ஜின்:

இந்த பைக்கில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 312.12 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது.  6 கியர்கள் உள்ளது. இந்த பைக் 169 கிலோ எடை கொண்டது. 11 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது.

மைலேஜ் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை அளிக்கிறது. இந்த பைக் சாம்பல், மஞ்சள், சிவப்பு என நான்கு வண்ணங்களில் உள்ளது. 28.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 35.08 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

சிறப்புகள்:

1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் உள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 330 கிலோமீட்டர் வரை செல்லலாம். ஸ்போர்ட், ட்ராக், அர்பன், ரெயின் மற்றும் சூப்பர்மோடோ மோடில் உள்ளது.

 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது.  சுவிட்சபள் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

வசதிகள்:

யூஎஸ்டி ஃபோர்க் 43 மி.மீட்டர் டயாமீட்டர் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.  30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடங்கள் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 5 டிஎஃப்டி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல்  இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. 

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி கொண்டது. 2 ட்ரிப்மீட்டர், டிஜிட்டல் வசதி கொண்டது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் , லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி கொண்டது.

செல்போன் அழைப்பு அலர்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.  செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி இல்லை. கிளட்ச் மற்றும் ப்ரேக் வசதி உள்ளது. கடைசியாக பார்க்கிங் வசதி செய்த இடம் கொண்டது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்கு உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI