இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்போர்ட் பைக்கான டிவிஎஸ் அப்பாச்சி RTR 160, 2025 பதிப்பில் புதிய வசதிகளுடன் ரூ.1.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. பைக்கின் புதிய பதிப்பில் மிகுந்த இன்ஜின் மேம்பாடுகள், கூடுதல் வசதிகள் மற்றும் நவீன டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, அது என்ன என்பதை காண்போம்.
புதுமையான ஸ்டைல், ஸ்போர்ட்டி டிசைன்
புதிய அப்பாச்சி RTR 160 பைக் பார்ப்பதற்கு முந்தைய மாடலை போலவே ஸ்போர்ட்டி தோற்றத்துடன் இருக்கிறது. மேலும் இதன் ஹெட்லேம்ப் பகுதி தனித்துவமான டிசைன் கொண்டது. பைக் வெளித்தோற்றம் கூர்மையான கோடுகள் மற்றும் இருபுறம் டேங்க் ஷூட்களும் வழங்கப்பட்டுள்ளது. கூர்மையான பின் பகுதி மற்றும் சிங்கள் இருக்கை பைக்கின் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேலும் அழகுப்படுத்துகின்றன.
மேலும், சிவப்பு அலாய் வீல்களுடன் கூடிய மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் வண்ணங்களில் இந்த மாடல் வந்துள்ளது, இது இளம் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் வகையில் உள்ளது.
ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகள்
இந்த பைக்கின் முக்கிய ஹைலைடாக, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் வசதி இணைக்கப்படுகிறது. புதிய அப்பாச்சி RTR 160-வில் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களில், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழிகாட்டும் வசதி, பயணத்தின் போது லீன் ஆங்கிள் பயன்முறை தகவல்கள், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கை, மேலும் வாய் வழியாக (வாய்ஸ் கமாண்ட்) பைக் கட்டுப்படுத்தும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இன்ஜின் மற்றும் செயல்திறன் எப்படி?
2025 Apache RTR 160 மாடலில் 159cc ஒற்றை சிலிண்டர், காற்று-குளிரூட்டப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது OBD-2B தரநிலைக்கு ஏற்ப நவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8,750 rpm இல் அதிகபட்சமாக 15 ஹார்ஸ் பவரை வழங்கும் திறன் கொண்டது. அதே நேரத்தில், 7,000 rpm இல் 13.85 Nm டார்க்கை உற்பத்தி செய்யும்.
இந்த சக்தி 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இரட்டை ஷாக் அப்சப்பர்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னணியில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் அமைக்கப்பட்டுள்ளன, இது சாலையிலான நிலைத்தன்மையைஉ மேலும் அதிகரிக்க உதவுகிறது.
சவால்விடும் அப்பாச்சி RTR 160:
இந்த புதிய அப்கிரேட் மூலம், Apache RTR 160 பஜாஜ் பல்சர் NS160, யமஹா FZ-S உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு நேரடி சவாலை ஏற்படுத்த உள்ளது. புதிய வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பவர்டிரெயின் காரணமாக, இளைஞர்களிடையே இந்த பைக் அதிகமாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI