இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஹோண்டா, பஜாஜ் ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளும் வகையில் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் திகழ்ந்து வருகிறது. :

Continues below advertisement

 Ampere Magnus Grandy:

ஓலா, ஏதருக்கு நிகராக இந்தியாவில் கால்தடம் பதிக்க துடித்து வரும் நிறுவனம் Ampere. இவர்களின் Ampere Magnus Grand இரு சக்கர வாகனம் பற்றி கீழே விரிவாக காணலாம். Ampere Magnus Grand இரு சக்கர வாகனத்தின் விலை ரூபாய் 98 ஆயிரத்து 29 ஆகும். இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

Magnus Grand Standard  - 98 ஆயிரத்து 29

Continues below advertisement

Magnus Grand Max  - ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரத்து 190

மைலேஜ்:

இந்த Magnus Grand Standard இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 118 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் பேட்டரி ஆற்றல் 2.3 கிலோவாட் ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது. நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் இது உள்ளது.  இதில் சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இதன் டிக்கி வசதி 22 லிட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. 

Magnus Grand Max இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வரை செல்லலாம். இதை சார்ஜ் செய்வதற்கு 5-6 மணி நேரம் ஆகிறது. இதில் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது. இதன் டிக்கி வசதி 33 லிட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் வசதி முன்பக்கம் உள்ளது. 

சிறப்புகள்:

எகோ மற்றும் சிட்டி மோடில் உள்ளது. ஹப் மோட்டார் இதில் உள்ளது. எல்எஃப்பி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கமும், பின்பக்கமும் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், காய்ல் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 

எடை தாங்கும் திறன்:

இந்த இ ஸ்கூட்டர் 108 கிலோ எடை கொண்டது. இந்த இ ஸ்கூட்டர் 150 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது. 5 வருடம் பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது.

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. டிஆர்எல்எஸ் விளக்குகள் இதில் உள்ளது. ஹாலோஜன் விளக்குகளே இதில் உள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் இளைஞர்கள், பெண்கள் அனைவரும் சுலபமாகவும், லாவகமாகவும் ஓட்டுவதற்கு ஏற்ற இரு சக்கர வாகனமாக இது உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI