Tata Avinya Flagship EV: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மையான மின்சார கார் மாடலான அவின்யா 510 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

டாடா அவின்யா EV:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தான் கர்வ் மற்றும் ஹாரியர் கார்களின் மின்சார எடிஷன்களை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டுமே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடப்பு நிதியாண்டின் இறுதியில் மற்றொரு மின்சார கார் மாடலான சியாராவை சந்தைக்கு கொண்டுவர, உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான சியாரா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 2027-28 காலத்தில் நிறுவனத்தின் ப்ரீமியம் மின்சார கார் மாடலான அவின்யா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ப்ளாட்ஃபார்மில் அவின்யா:

டாடாவின் தற்போதுள்ள மின்சார கார் மாடல்களைப் போல் அல்லாமல், புதிய அவின்யா கார் மாடலானாது, ஜாகுவர் லேண்ட் ரோவர் மூலம் உருவாக்கப்பட்ட EMA ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு தனித்து காட்சியளிக்க உள்ளது. இந்த பிளாட்ஃபார்மானது, தற்போதைய மாடல்களுடனொப்பிடுகையில் டாடாவின் புதிய காரில் அதிகப்படியான இடவசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இடம்பெறச் செய்கிறது. 

டாடா ஃப்ளாக்‌ஷிப் மின்சார கார் அவின்யா:

டாடாவின் மிகவும் ப்ரீமியமான மின்சார காராக நிலைநிறுத்தப்பட உள்ள அவின்யா, டாடாவின் போர்ட்ஃபோலியோவில் மிக உயரிய இடத்தை பெற உள்ளதாம். 2030ம் ஆண்டுக்கள் 7 புதிய கார்கள் உள்ளிட்ட 30 மாடல்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ள டாடாவின் நீண்ட கால திட்டத்தில் அவின்யா முக்கிய பங்கினை பெற உள்ளது. டாடா தனது போர்ட்ஃபோலியோவிற்குள் ஒரு தனித்துவமான மாடலாக நிலைநிறுத்துவதன் மூலம் அவின்யாவிற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடியும். சாத்தியமான க்ராஸ்-கூபே வழித்தோன்றல் உட்பட பல உடல் பாணிகளையும் வழங்கலாம்.

உள்நாட்டிலேயே உற்பத்தி - சிக்கலில் பிளாட்ஃபார்ம்

டாடா அவின்யா காருக்கான மையமாக உள்ள EMA ப்ளாட்ஃபார்மானது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட உள்ளதால், ராயல்டி மட்டும் செலுத்தி குறைந்த செலவில் உற்பத்தி செய்ய டாடா முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மின்மயமாக்கப்பட்ட மாடுலர் ஆர்கிடெக்சர் (EMA) தளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும்  லட்சியத் திட்டத்தை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளூரில் உதிரிபாக சப்ளையர்கள் நிறுவனம் நிர்ணயித்த தேவையான விலை மற்றும் தர தரத்தில் விநியோகத்தை மேற்கொள்ள முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் விளைவாக, EMA அடிப்படையிலான வாகனங்களை வெளியிடுவதற்கான காலக்கெடுவில் நிச்சயமற்ற தன்மையை உருவாகியுள்ளது.  அவின்யா சீரிஸ் கார்களுடம் இதே ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தவே திட்டமிட்டுள்ளது. ஆனால், புதிய ப்ளாட்ஃபாமின் கட்டமைப்பு பணிகள் தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்பதால், டாடா மோட்டார்ஸின் எதிர்கால பிரீமியம் EV காரான அவின்யாவின் வெளியீடும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

டாடா அவின்யா - கான்செப்டில் இருந்த அம்சங்கள்:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெனரேஷன் 3 பிளாட்ஃபார்மில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட அவின்யா கான்செப்ட், உள்ளேயும் வெளியேயும் அதன் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வடிவமைப்பிற்காக தனித்து நின்றது. கேபின் வழக்கமான அமைப்புகளிலிருந்து விலகி, பெரிய தொடுதிரைகளை நீக்கி, டேஷ்போர்டில் நீட்டிக்கப்பட்ட ஒரு ஹிடன் டிஸ்பிளேவிற்கு மாறாக திறந்த உணர்வைத் தந்தது. அதன் எதிர்கால கவர்ச்சியைச் சேர்த்து, ஹெட்ரெஸ்ட்கள் ஒருங்கிணைந்த ஒலிப் பட்டையுடன் பொருத்தப்பட்டு இருந்தன. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 510 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சங்கள் காரில் உள்ள செயல்பாடுகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்தன. நவீன வாகனங்களில் காணப்படும் வழக்கமான தொடுதிரை-கனமான அமைப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை பெற்று இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அவின்யா எக்ஸ் நிச்சயமாக பல வழிகளில் மேம்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI