EVs BaaS Battery: இந்திய சந்தையில் வாடகை பேட்டரி ஆப்ஷனில் கிடைக்கும் கோமெட், விண்ட்சர், பஞ்ச், இ-விடாரா உள்ளிட்ட கார் மாடல்களின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

வாடகை பேட்டரியில் மின்சார கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வந்தாலும், இன்ஜின் எடிஷன்களுடன் ஒப்பிடும்போது அதிகப்படியான விலையானது EV கார்களை அணுகுவதை சிரமமாக்குகிறது. பேட்டரி பேக்குகள் மின்சார கார்களின் விலையை எகிற செய்வதால், நிதி கரிசனம் கொண்டவர்கள் இன்ஜின் எடிஷனை நோக்கி தள்ளப்படுகிறார்கள். இந்த பிரச்னைக்கான தீர்வாகவே மின்சார கார் உற்பத்தியாளர்கள், Baas எனப்படும் சந்தாதாரர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் காருக்கான விலையை மட்டுமே செலுத்தி வாகனத்தை சொந்தமாக்கி கொள்ளலாம். பேட்டரியை சந்தா அடிப்படையில் பெற்று, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் உள்ளூரில் கிடைக்கும் கார் மாடல்களின் ஒப்பீடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

எம்ஜி கோமெட் மின்சார கார்:

எம்ஜி நிறுவனத்தின் இந்த என்ட்ரி லெவல் மின்சார காரை பேட்டரி இல்லாமல், வெறும் ரூ.4.92 லட்சத்திற்கே பயனர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். நாட்டின் மிகவும் மலிவு விலை மின்சார காராகவும் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.2 செலவில் பேட்டரியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆரம்பத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.5 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.3.2 ஆக உயர்ந்து இருப்பது, உற்பத்தியாளர்கள் பேட்டரிக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தலாம் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது. 17.3 kWh பேட்டரி பேக்கை கொண்டு கோமெட் ஆனது 230 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட் பேட்டரியுடன் காரின் விலை பேட்டரி இன்றி காரின் விலை சேமிப்பு
எக்சிக்யூடிவ் ரூ.7.63 லட்சம் ரூ.4.92 லட்சம் +கி.மீ., ரூ.3.2 ரூ.2.71 லட்சம்
எக்சைட் ரூ.8.73 லட்சம் ரூ.6.09 லட்சம் +கி.மீ., ரூ.3.2 ரூ.2.64 லட்சம்
எக்ஸ்க்ளூசிவ் ரூ.9.73 லட்சம் ரூ.7.09 லட்சம் +கி.மீ., ரூ.3.2 ரூ.2.64 லட்சம்
ப்ளாக்ஸ்டோர்ம் எடிஷன் ரூ.10 லட்சம் ரூ.7.3 லட்சம் +கி.மீ., ரூ.3.2 ரூ.2.37 லட்சம்

டாடா பஞ்ச் மின்சார கார்:

பேட்டரி வசதி இன்றி டாடாவின் பஞ்ச் கார் மாடலை வெறும் ரூ.6.49 லட்சத்திற்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம். இயல்பு நிலையில் இதன் விலையானது ரூ.9.69 லட்சத்தில் தொடங்கி ரூ.12.59 லட்சம் வரை நீள்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.6 செலவு செய்தாலே போதுமானது. என்ட்ரி லெவலான ஸ்மார்ட் ட்ரிம்மில் மட்டுமே இந்த வாடகை முறை வழங்கப்படுகிறது. அதன்படி, 30KWh பேட்டரியானது 375 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷனாக உள்ளது. 

வேரியண்ட் பேட்டரியுடன் காரின் விலை பேட்டரி இன்றி காரின் விலை சேமிப்பு
ஸ்மார்ட் 30 ரூ.9.69 லட்சம் ரூ.6.49 லட்சம் +கி.மீ., ரூ.2.6 ரூ.3.20 லட்சம்
ஸ்மார்ட்+ 30 ரூ.10.29 லட்சம் அறிவிக்கப்படவில்லை -
ஸ்மார்ட்+ 40 ரூ.10.89 லட்சம் அறிவிக்கப்படவில்லை -
அட்வென்சர் 40 ரூ.11.59 லட்சம் அறிவிக்கப்படவில்லை -
எம்பவர்ட் 40 ரூ.12.29 லட்சம் அறிவிக்கப்படவில்லை -
எம்பவர்ட்+S 40 ரூ.12.59 லட்சம் அறிவிக்கப்படவில்லை -

எம்ஜி விண்ட்சர் மின்சார கார்:

நாட்டில் அதிகம் விற்பனையாகும் மின்சார மார் மாடலான விண்ட்சரை, பேட்டரி இன்றி வெறும் ரூ.9.99 லட்சத்திற்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.9 தொடங்கி ரூ.4.5 ரூபாய் வரை, வாடகை பேட்டரிக்கு செலவழிக்க வேண்டி இருக்கும். 38KWh மற்றும் 52.9KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரானது, அதிகபட்சமாக 449 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட் பேட்டரியுடன் காரின் விலை பேட்டரி இன்றி காரின் விலை சேமிப்பு
எக்சைட் ரூ.14 லட்சம் ரூ.9.99 லட்சம் +கி.மீ., ரூ.3.9 ரூ.5.01 லட்சம்
எக்ஸ்க்ளூசிவ்  ரூ.15.53 லட்சம் ரூ.11.14 லட்சம் +கி.மீ., ரூ.4 ரூ.4.39 லட்சம்
எக்ஸ்க்ளூசிவ் ப்ரோ ரூ.16.53 லட்சம் ரூ.12.25 லட்சம் +கி.மீ., ரூ.4.5 ரூ.4.28 லட்சம்
எசென்ஸ் ரூ.17.38 லட்சம் ரூ.12.29 லட்சம் +கி.மீ., ரூ.3.9 ரூ.5.09 லட்சம்
எசென்ஸ் ப்ரோ ரூ.18.50 ரூ.13.39 லட்சம் +கி.மீ., ரூ.4.5 ரூ.5.11 லட்சம்

மாருதி சுசூகி இ-விட்டாரா

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலான இ-விட்டாராவும், வாடகை பேட்டரி வசதியுடன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 49KWh என்ற சிறிய பேட்டரி பேக் கொண்ட எடிஷனுக்கு கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயும், 61KWh என்ற பெரிய பேட்டரி பேக்கிற்கு கிலோ மீட்டருக்கு 4.39 ரூபாயும் செலவிட வேண்டி இருக்கும். இதன் மூலம், இந்தியாவிலேயே மின்சார கார் மீது அதிகபட்சமாக ரூ.5.5 லட்சம் வரை சேமிக்கும் சலுகையை வழங்கும் மாடலாக இ-விட்டாரா உள்ளது.

வேரியண்ட் பேட்டரியுடன் காரின் விலை பேட்டரி இன்றி காரின் விலை சேமிப்பு
டெல்டா ரூ.15.99 லட்சம் ரூ.10.99 லட்சம் +கி.மீ., ரூ.3.99 ரூ.5 லட்சம்
ஜீடா ரூ.17.49 லட்சம் ரூ.11.99 லட்சம் +கி.மீ., ரூ.3.99 ரூ.5.5 லட்சம்
ஆல்பா ரூ.19.79 லட்சம் ரூ.14.29 லட்சம் +கி.மீ., ரூ.4.39 ரூ.5.5 லட்சம்

MG ZS EV:

எம்ஜி நிறுவனத்தால் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார கார் மாடலான ZS EV, 2019ம் ஆண்டு முதல் உள்நாட்டில் விற்பனையில் உள்ளது. இந்த காரில் மிகப்பெரிய பேட்டரியாக 50.3KWh ஆப்ஷன் உள்ளது. இதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4.5 செலவிட வேண்டியுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

வேரியண்ட் பேட்டரியுடன் காரின் விலை பேட்டரி இன்றி காரின் விலை சேமிப்பு
எக்சிக்யூடிவ் ரூ.17.99 லட்சம் ரூ.13 லட்சம் +கி.மீ., ரூ.4.5 ரூ.4.99 லட்சம்
எக்சைட் ப்ரோ ரூ.18.75 லட்சம் ரூ.13.51 லட்சம் +கி.மீ., ரூ.4.5 ரூ.5.24 லட்சம்
எக்ஸ்க்ளூசிவ் ப்ரோ ரூ.19.75 லட்சம் ரூ.14.51 லட்சம் +கி.மீ., ரூ.4.5 ரூ.5.24 லட்சம்
எசென்ஸ் ரூ.20.75 லட்சம் ரூ. 15.51 லட்சம் +கி.மீ., ரூ.4.5 ரூ.5.24 லட்சம்

 


Car loan Information:

Calculate Car Loan EMI