இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ள இந்த விலை ஏற்றம், நடுத்தர வர்க்கத்தினரின் பணப்பையை நேரடியாகப் பாதிக்கிறது. வாகன ஓட்டிகள் மாற்று எரிசக்தி ஆதாரங்களை நோக்கித் திரும்பினாலும், மின்சார வாகனங்கள் இன்னும் முழுமையாக சந்தையில் கிடைக்கவில்லை என்பதோடு, அவற்றின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை.

லும், சில மாற்று எரிசக்தி வாகனங்களின் விலை சாமானியர்களால் எட்ட முடியாத உயரத்தில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், குறைந்த பராமரிப்புச் செலவு, அதிக மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் பெரும்பாலான மக்கள் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் சிஎன்ஜி (CNG) வாகனங்களை நோக்கித் திரும்புகின்றனர். குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அறிமுகமாகியுள்ள மேம்படுத்தப்பட்ட சிஎன்ஜி கார்கள் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மைலேஜ் ராட்சன் மாருதி சுசுகி செலரியோ

அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி செலரியோ முதலிடத்தில் உள்ளது. இது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 35.60 கி.மீ என்ற வியக்கத்தக்க மைலேஜை வழங்குகிறது. புதிய K 10CC டூயல்ஜெட் 1.0-லிட்டர் மூன்று-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ள இந்த கார், 66hp சக்தியையும் 89Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் குரோம் அலங்காரங்கள் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகளுடன் இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 5.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர்

இந்தியக் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்தமான வாகனமாகத் திகழும் வேகன் ஆர், அதன் விசாலமான உட்புற வசதிக்காகவே அதிகம் விற்பனையாகிறது. சிஎன்ஜி பயன்முறையில் ஒரு கிலோவுக்கு 34.05 கி.மீ மைலேஜ் தரும் இந்த கார், பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. தற்போதைய மாடலில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS மற்றும் வேக எச்சரிக்கை அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியச் சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் ஆரம்ப விலை 5.89 லட்சம் ரூபாய் ஆகும்.

செடான் பிரிவில் கலக்கும் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட்

சற்று ஆடம்பரமாகவும் அதே சமயம் சிக்கனமாகவும் பயணிக்க விரும்புபவர்களுக்கு மாருதி சுசுகி டிசையர் சிறந்த தேர்வாகும். 1.2 லிட்டர் 3-சிலிண்டர் இன்ஜின் கொண்ட இந்த செடான் கார், ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 33.73 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்க் இதிலுள்ள கூடுதல் சிறப்பாகும். அதேபோல இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்விஃப்ட், Z சீரிஸ் இன்ஜினுடன் ஒரு கிலோவுக்கு 32.85 கி.மீ மைலேஜ் தருகிறது. 82PS சக்தியை வெளிப்படுத்தும் இந்த காரின் ஆரம்ப விலை 7.45 லட்சம் ரூபாயாக உள்ளது.

பட்ஜெட் விலையில் ஆல்டோ கே10 

குறைந்த விலையில் கார் வாங்க விரும்புபவர்களுக்கு ஆல்டோ கே10 மிகச்சிறந்த மாற்றாகும். ஒரு கிலோவுக்கு 31.59 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரில், 7-அங்குல தொடுதிரை மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற நவீன வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டின் புதிய பத்ரா விதிமுறைகளுக்கு இணங்க இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிஎன்ஜி காரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்வது அவசியம். இவை எரிபொருள் செலவைச் மிச்சப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்தையும் உறுதி செய்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI