மழைக்காலங்களில் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்திற்கு ஏற்ற ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில், 125cc பிரிவில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125) மற்றும் சுஸுகி அக்செஸ் 125 (Suzuki Access 125) ஆகிய இரு மாடல்களின் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் குறித்த முழுமையான ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

டிவிஎஸ்ஜூபிடர் 125

இதில் 124.8cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.15 PS பவரையும், 10.5 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற வகையில் இதன் பெட்ரோல் நிரப்பும் வசதி வண்டியின் முன்பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனைந்துகொண்டே வண்டியை விட்டு இறங்க வேண்டியதில்லை.

இதன் சீட்டிற்கு அடியில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய ஸ்டோரேஜ் உள்ளது. இதில் இரண்டு ஹெல்மெட்கள் அல்லது மழையில் நனையாமல் இருக்க லேப்டாப், பெரிய பைகளை எளிதாக வைத்துக்கொள்ளலாம். இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு சுமார் 50 கி.மீ மைலேஜ் தரக்கூடியது.

Continues below advertisement

சுஸுகிஅக்செஸ் 125 (Suzuki Access 125)

இந்த ஸ்கூட்டரில் 124cc இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.7 PS பவரையும், 10 Nm டார்க் திறனையும் தருகிறது. இது கச்சிதமான ரெட்ரோ கிளாசிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மூடி பின்பக்கத்தில் வெளிப்புறமாக அமைந்துள்ளது.

இதன் சீட்டிற்கு அடியில் 21.8 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஜூபிடருடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும், அன்றாடத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு சுமார் 50 முதல் 55 கி.மீ வரையிலான சிறப்பான மைலேஜை வழங்குகிறது.

எது சரியான தேர்வு?

இரண்டு மாடல்களிலுமே பாதுகாப்பிற்காக டிஸ்க் பிரேக் வசதி மற்றும் பிரகாசமான எல்.இ.டி. ஹெட்லைட்டுகள் உள்ளன. சுஸுகி அக்செஸ் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் வசதிகள் உள்ளன.

மழைக்காலத்தைப் பொறுத்தவரை, பொருட்களை நனையாமல் பாதுகாக்க அதிக இடவசதி மற்றும் முன்புற பெட்ரோல் மூடி அமைப்புடன் டிவிஎஸ் ஜூபிடர் 125 சிறந்த சௌகரியத்தை வழங்குகிறது. மறுபுறம், கிளாசிக் டிசைன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சற்று அதிக பவர் விரும்புவோருக்கு சுஸுகி அக்செஸ் 125 சிறந்த தேர்வாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI