ABP Auto Awards 2024: ஏபிபி லைவ் ஆட்டோ விருதில் ஆண்டின் சிறந்த காராக, ஹுண்டாய் வெர்னா தேர்வு செய்யப்பட்டுள்ளது.


ஏபிபி ஆட்டோ விருதுகள்:


ஏபிபி ஆட்டோ லைவ் விருது வழங்கும் நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றுள்ளது.  2023ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த கார்கள் மற்றும் பைக்குகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கார்கள் மட்டுமே விருதுகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டன. ஆண்டின் சிறந்த கார் உள்ளிட்ட பிற வகை விருதுகளுக்கான வெற்றியாளர்களை தேர்வு செய்ய,  அனைத்து வாகனங்களும் ICAT- சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தில் சோதிக்கப்பட்டன. அதன் முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வென்ற கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.




ஆண்டின் சிறந்த எஸ்யுவி ஆக ஹோண்டா எலிவேட் தேர்வு


விருது வென்ற கார்களின் பட்டியல்:


1. ஆண்டின் பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட கார் - எம்ஜி காமெட்


2. ஆண்டின் சிறந்த செடான் - ஹூண்டாய் வெர்னா


3. இந்த ஆண்டின் சிறந்த ஆஃப்-ரோடர் - மாருதி சுசுகி ஜிம்னி


4. ஆண்டின் MPV - Toyota Innova Hycross


5. சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆஃப் தி இயர் - ஹூண்டாய் எக்ஸ்டர்


6. ஆண்டின் பிரீமியம் SUV - BMW X1


7. ஆண்டின் சிறந்த சொகுசு SUV - ரேஞ்ச் ரோவர் வேலார்


8. லக்ஸரி ஆஃப்-ரோடர் ஆஃப் தி இயர்- லெக்ஸஸ் எல்எக்ஸ்


9. ஆண்டின் சொகுசு கார்- BMW 7 சீரிஸ்


10. ஆண்டின் சிறந்த சொகுசு EV- Mercedes-Benz EQE


11. ஆண்டின் சிறந்த EV - Hyundai Ioniq 5




ஆண்டின் சிறந்த ஃபேஸ்லிஃப்ட் - டாடா நெக்ஸான்


12. இந்த ஆண்டின் செயல்திறன்மிக்க SUV - லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்டே


13. ஆண்டின் சிறந்த சூப்பர் கார் - ஆஸ்டன் மார்ட்டின் DB12


14. ஆண்டின் வேரியண்ட் - மஹிந்திரா தார் 4x2


15. ஆண்டின் சிறந்த ஃபேஸ்லிஃப்ட் - டாடா நெக்ஸான்


16. ஆண்டின் சிறந்த செயல்திறன்மிக்க கார்- Mercedes-AMG C43


17. ஆண்டின் சிறந்த  SUV - ஹோண்டா எலிவேட்


18. ஆண்டின் சிறந்த வடிவமைப்பு - மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்


19. ஃபன் டு டிரைவ் கார் ஆஃப் தி இயர்- மாருதி சுசுகி ஜிம்னி


20. ஆண்டின் சிறந்த கார் - ஹூண்டாய் வெர்னா




ஆண்டின் சிறந்த ஆஃப் ரோடர் - மாருதி சுசுகி ஜிம்னி


ஆண்டின் சிறந்த கார்:


அனைத்து பிரிவுகளிலும் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றதோடு,  அனைத்து நடுவர்களிடமும் அதிக சராசரி மதிப்பெண்களைப் பெற்ற காருக்கு 'ஆண்டின் சிறந்த கார்' வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏபிபி லைவ் ஆட்டோ 2024 விருதில், ஆண்டின் சிறந்த காராக ஹுண்டாய் வெர்னா தேர்வாகியுள்ளது. ஹுண்டாய் வெர்னா விலை 11 லட்சத்தில் தொடங்கி 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் வெர்னா மொத்தமாக 14 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் வெர்னாவில் 1.5L நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கிடைக்கிறது. இது 6300ஆர்பிஎம்மில் 115பிஎஸ் ஆற்றலையும், 4500ஆர்பிஎம்மில் 144என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI