இந்திய வாகன சந்தையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய புதிய மாடல் வாகனங்களை கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஓணம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதை முன்னிட்டு முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளனர். 

அந்த வரிசையில் அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள புதிய இருசக்கர வாகனங்களின் பட்டியலை கீழே காணலாம். 

1. TVS Ntorq 150:

முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமா டிவிஎஸ்-ன் புதிய TVS Ntorq 150 ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் 1ம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டிவிஎஸ்-ன் மிகவும் முக்கியமான ஸ்கூட்டராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் சிறப்பம்சங்கள் வெளியாக உள்ளது. இதன்  எக்ஸ் ஷோ ரூம் விலை விலை ரூபாய் 1.3 லட்சம் முதல் ரூ.1.4 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2. Ather EL:

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஏதர். தற்போது குறைவான விலையில் இ ஸ்கூட்டர் தரும் நிறுவனமாக ஏதர் உள்ளது. இவர்களின் புதிய படைப்பு Ather EL ஆகும். இந்த புதிய Ather EL இ ஸ்கூட்டர் வரும் 30ம் தேதி அறிமுகமாக உள்ளது. Ola S1X, Bajaj Chetak 3001 மற்றும் Hero Vida VX2 ஆகிய வாகனங்களை காட்டிலும் விலை குறைவாக ரூபாய் 1 லட்சத்திற்கும் கீழே இந்த வாகனத்தின் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3. Royal Enfield Flying Flea C6

கம்பீரமான பைக் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது Royal Enfield ஆகும். பழமையும், பெருமையும் நிறைந்த ராயல் என்பீல்ட் சமீபகாலமாக மீண்டும் பல வேரியண்ட்களில் சந்தையில் விற்பனையை துரிதப்படுத்தியுள்ளனர். அவர்களின் புதிய படைப்பு Royal Enfield Flying Flea C6 ஆகும்.

இவர்களின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Royal Enfield Flying Flea C6 ஆகும். லடாக்கில் இதன் டெஸ்ட் ட்ரைவிங் நடத்தப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெற உள்ள மோடோவெர்ஸ் 2025ல் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச், பேட்டரி திறன் இன்னும் வெளியிடப்படவில்லை. 

4. Triumph Bonneville 400:

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ட்ரூம்ப் நிறுவனத்தின் பிரத்யேக படைப்பாக இந்த Triumph Bonneville 400 அமைந்துள்ளது. இந்த பைக் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ராயல்ட் என்பீல்ட் கிளாசிக் 350க்கு போட்டியாக இந்த பைக் சந்தைக்கு வருகிறது. இந்த பைக்கை இத்தாலியில் நடைபெற்ற கண்காட்சியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தனர். அதன்பிறகு இந்திய சந்தைக்கு கொண்டு வர உள்ளனர். இதில் 398 சிசி ஒற்றைச் சிலிண்டர் லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

5. KTM RC 160:

இந்திய வாகன சந்தையில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்திருக்கும் பைக் கேடிஎம். சமீபத்தில் கேடிஎம் ட்யூக் 160 அறிமுகப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் KTM RC 160 அறிமுகப்படுத்த உள்ளனர். யமஹா ஆர்15 வி4க்கு சவால் அளிக்கும் விதமாக இந்த பைக்கை வடிவமைத்துள்ளனர். ட்யூக் 160ல் இருப்பது போல 160 சிசி எஞ்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த பைக்குகள் சந்தைக்கு வந்தால் மிகப்பெரிய அளவில் பைக் விற்பனையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI