இந்தியாவில் நாளுக்கு நாள் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக தற்போது  கார்களின் விலை குறைந்துள்ளது. அதேசமயம், போட்டி நிறுவனங்களைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு முன்னணி நிறுவனமும் வித்தியாசமான காரை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. 

Continues below advertisement

அந்த வகையில், நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள 4 கார்கள் என்னென்ன? என்பதை காணலாம். 

1. Maruti Fronx Facelift:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு மாருதி ப்ரான்க்ஸ். இதன் அடுத்த அப்டேட் வெர்சனாக Maruti Fronx Facelift காரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்தாண்டின் முதல் பாதியில் இந்த கார் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.2 லிட்டர் எஞ்ஜின், 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. ஹைப்ரிட் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் 35 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.  ஹைப்ரிட் மாடலில் உருவாக உள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

2. Maruti Suzuki e Vitara:

மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக விதாரா கார் உள்ளது. மாருதி நிறுவனத்தின் முழு முதல் எலக்ட்ரிக் காராக உருவாகி வருகிறது Maruti Suzuki e Vitara. இந்த கார் இந்தியாவில் அடுத்தாண்டு முதல் பாதியில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த கார் இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாகத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பிற்கான சில அரிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இதன் அறிமுகம் தாமதமானது.  இந்த கார் முதலில் ஐரோப்பிய நாடுகளில் அடுத்தாண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது. 

எஸ்யூவி காரான இந்த கார் 48.91 கிலோவாட் பேட்டரி மற்றும் 61.4 கிலோவாட் பொருத்தப்பட்ட காராக விற்பனைக்கு வர உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் வரை இந்த கார் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. 9 நொடிகளில் 100 கி.மீட்டர் வரை வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. 50 நிமிடத்தில் 80 சதவீத சார்ஜிங் ஆகும் வசதி கொண்டது. 

3. Grand Vitara Upgrade:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று கிராண்ட் விதாரா. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக Grand Vitara Upgrade சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.  1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரிட் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்களை கொண்டு இந்த கார் சந்தைக்கு வர உள்ளது. பனோரமிக் சன்ஃரூப் உள்ளது. 

4. Next-gen Maruti Baleno:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Baleno. தற்போது இதன் அப்டேட் வெர்சனாக Next-gen Maruti Baleno சந்தைக்கு வர உள்ளது. இந்த கார் அடுத்தாண்டு பிற்பாதியிலோ அல்லது 2027ம் ஆண்டு முற்பாதியிலே விற்பனைக்கு வர உள்ளது. புத்தம் புது வடிவத்துடன் புதிய டிசைனில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. ஹைப்ரிட் வடிவத்தில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. நல்ல மைலேஜ் தரும் காராக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது. 

மஹிந்திரா, டாடா, டொயோட்டோ, நிஸான் என இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகவும் சவாலானதாக இருப்பதால் மாருதி சுசுகி நிறுவனமும் தொடர்ந்து விற்பனைக்கு புதிய கார்களையும், வேரியண்ட்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI