கார் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய, 10 விஷயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கார் பயன்பாடு:


சொகுசு வாழ்க்கையின் அடையாளம் என்பதில் இருந்து, மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக கார் மாற்றம் கண்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினர் மத்தியிலும் காரின் பயன்பாடு என்பது, கடந்த 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உற்பத்தி நிறுவனங்கள் பல பட்ஜெட் விலையிலான கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆனாலும், அவற்றையும் வாங்க முடியாதவர்களின் விருப்பமாக இருப்பது, ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்படும் கார் தான். அப்படி, ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்படும் காரை வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அந்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


01. காரின் நிலையை பரிசோதித்தல்:


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள காரை வாங்கும்போது, மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது அந்த காரின் நிலையை தான். வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி போதுமான அனுபவம் இருந்தால் நாமே அதனை பரிசோதிக்கலாம் இல்லாவிட்டால் நம்பகமான மெக்கானிக்கின் உதவியை நாடலாம். காரின் உட்புறம், வெளிப்புறம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.


உட்புறம் கவனிக்க வேண்டியவை:


காரில் உள்ள அப்ஹோல்ஸ்டரியை சரிபார்ப்பதோடு,  முன் மற்றும் பின் இருக்கைகளில் ஏதேனும் கிழிந்து அல்லது கறை இருக்கிறதா என்பதையும் கவனித்தில் கொள்ளுங்கள்.  மியூசிக் சிஸ்டம், மானிட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் செயல்பாடு சரியாக இருப்பதையும் உறுதி செய்யுங்கள்.


வெளிப்புறம் கவனிக்க வேண்டியவை:
எல்லா கோணங்களிலும் வாகனத்தை வெளிப்புறத்தை உன்னிப்பாக கவனியுங்கள். துருப்பிடித்தல் மற்றும் பெயிண்ட் சேதம் ஆகியவற்றைக் அருகாமையில் இருந்து பார்த்து உறுதி செய்யுங்கள்.


ஃப்ரேமிங்:  காரின் ஃப்ரேமிங்கை ஆய்வு செய்வதும் வாகனத்தைப் பற்றி நன்கு அறிய உதவும்.  கார் சமமாக வைக்கப்பட்டுள்ளதா என கவனித்து, அண்டர்கேரேஜுக்கு அருகில் தளர்வான எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.


டயர்கள்: டயர்களின் தேய்மானம் மற்றும் கிழிவு தொடர்பான தன்மையை சரிபார்க்க வேண்டும். டயர்கள் சீராக அணியப்படவில்லை அது சீரமைப்புச் சிக்கல்களுக்கு வழிவகுத்து,  வாகனம் ஓட்டும் போது கார் தேவையாற்ற அசைவுகளை உணரும்.


இன்ஜின்: ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள காரை வாங்கும்போது, இன்ஜினை முழுமையாக ஆய்வு செய்வது மிக முக்கியமானது. கசிவுகள், அரிப்பு மற்றும் விரிசல் குழாய்களை கவனித்தில் கொள்ளுங்கள். டிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்தி எண்ணெய் மற்றும் டிரான்ஸ்மிஷன் திரவத்தை சர்பாருங்கள்.


மைலேஜ்: கார் மிகவும் பழையதாக இல்லாவிட்டாலும் பெரிய மைலேஜ் சிக்கல் இருந்தால், அது வேறு ஏதோ ஒரு பெரிய பிரச்னையின் விளைவாக இருக்கலாம். ஒருமுறை பயன்பாட்டின் மூலம் அதை அறிவது கடினம் என்பதால், விற்பனையாளரிடம் மைலேஜைப் பற்றி விரிவாகப் கேட்டறியுங்கள். அதோடு, வாகனத்த டெஸ்ட் டிரைவ் செய்வதும் அதைப்பற்றிய நல்ல புரிதலை வழங்கும்.


பராமரிப்பு வரலாறு:


சில கார் உரிமையாளர்கள் வாகனத்தின் சர்வீஸ் தொடர்பான பதிவுகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர். ஆனால், சிலர் அப்படி செய்வதில்லை. காரின் பராமரிப்பு வரலாறு குறித்து உரிமையாளரிடம் தெளிவாக கேட்டறியுங்கள். அவர் வாகனத்தை நன்கு பராமரித்து இருந்தால், உங்களுக்கும் அந்த கார் நல்ல அனுபவத்தை வழங்கும்.  


வாகனப்பதிவு சான்று:


வாகனத்தின் பதிவு சான்றிதழின் உண்மைத் தன்மையை சரிபார்க்கவும். அதில் உரிமையாளரின் பெயர் மற்றும் இன்ஜின் எண், சேஸ் எண் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். சான்றிதழின் நகல் மட்டுமே இருந்தால், அது DRC என கூறப்படும். அப்படியானால், அதுதொடர்பாகவும்,  கார் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரியுங்கள். நிங்கள் வேறு மாநிலத்தில் வசிப்பவர் என்றால், அந்த மாநிலத்தின் பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) கார் பதிவு செய்யப்பட வேண்டும். வாங்கிய பிறகு வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டும். வாங்கும்போது கொண்டிருந்த விலை, காப்பீடு, சாலை வரி ரசீது மற்றும் மாசு சான்றிதழ் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கார் ஃபைனான்ஸ் மூலம் வாங்கப்பட்டு இருந்தால், படிவம் 35 மற்றும் நிதி நிறுவனத்தின் NOC ஆகியவை முக்கியமானவை. இன்ஜினின் இடமாற்றத்தில் ஏதேனும் மாற்றம் அல்லது வாகனத்தின் நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், அவையும் பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்படப்பட வேண்டும்.


கார் இன்சூரன்ஸ்:


செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது, ​​பழைய கார் இன்சூரன்ஸ் புதிய உரிமையாளரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். விற்பனையாளர் அதை முன்கூட்டியே செய்யவில்லை என்றால், அதை மாற்றுவது வாங்குபவரின் பொறுப்பாகும். கார் இன்சூரன்ஸ் புதிய உரிமையாளரின் பெயருக்கு மாற்றப்படாவிட்டால், வாகனம் விபத்து போன்ற பிற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் சிக்கியிருந்தால் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் . இன்சூரன்ஸில் உள்ள பல்வேறு அம்சங்களையும், விரிவாக அலசி ஆராய்ந்து அறிய வேண்டும்.


நோ க்ளைம் போனஸ் பரிமாற்றம்:


நோ க்ளைம் போனஸ் என்பது இன்சூரன்ஸ் தொடர்பானது. பாலிசி காலத்தில் உரிமைகோரலை தாக்கல் செய்யாததற்கு இது வெகுமதியாக வழங்கப்படுகிறது. எனவே, இது நோ க்ளைம் போனஸ் (NCB) என கூறப்படுகிறது. உங்கள் காரின் விரிவான காப்பீட்டுக் கொள்கையைப் புதுப்பிக்கும் போது இந்த போனஸ் உங்களுக்கு தள்ளுபடியை வழங்கலாம். அத்தகைய போனஸ் காரின் உரிமையாளருடன் தொடர்புடையது, காருக்கு அல்ல. உரிமைகோரல் இல்லாத போனஸை உரிமையாளரின் பழைய காரில் இருந்து அதே உரிமையாளரின் புதிய காருக்கு மாற்றலாம்.  ஆனால் விற்பவரிடமிருந்து வாங்குபவருக்கு மாற்ற முடியாது. எனவே, உரிமையாளர் முன்பு சொந்தமான காரை விற்ற புதிய காரை வாங்கும்போது இதைக் கவனத்தில் கொள்ளலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI