Skoda Kodiaq 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதல் அம்சங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ள புதிய, ஸ்கோடா கோடியாக் 3 எடிஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுகம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் புதிய கோடியாக் கார் மாடலானது, ரூ.36.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அடிப்படை மாடலான லவுஞ்ச் 5 சீட்டர் வேரியண்டின் விலை 3 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேநேரம், மிட்-ஸ்பெக் வேரியண்டான ஸ்போர்ட்லைன் 7 சீட்டர் மற்றும் டாப் ஸ்பெக் மாடலான செலக்‌ஷன் எல்&கே 7 சீட்டர்  வேரியண்ட்களின் விலை முறையே ரூ.1 லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வேரியண்ட்களில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

புதிய ஸ்கோடா கோடியாக் விலை பட்டியல்:

புதிய ஸ்கோடா கோடியாக்கின் மிட்-ஸ்பெக் வேரியண்டின் விலை ரூ.44.99 லட்சமாகவும், டாப் - ஸ்பெக் வேரியண்டின் விலை ரூ.46.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஸ்கோடா வேரியண்ட்விலை (எக்ஸ் ஷோரூம்)
லவுஞ்ச் 5 சீட்டர்ரூ 36.99 லட்சம்
ஸ்போர்ட்லைன் 7 சீட்டர்ரூ 44.99 லட்சம்
செலக்‌ஷன் எல்&கே 7-சீட்டர்ரூ 46.99 லட்சம்

கூடுதலாக ADAS தொழில்நுட்பம்

2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கோடா கோடியாக்கில் இணைக்கபப்ட்டுள்ள,  மிக முக்கியமான புதிய தொழில்நுட்ப அம்சமாக ADAS கருதப்படுகிறது. இதனுள் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் கீப் அசிஸ்ட், ஃப்ரண்டல் அசிஸ்ட் (வார்னிங் & ப்ரேக்கிங்), அடாப்டிவ் முகப்பு விளக்குகள், ரியர் ட்ராஃபிக் அலெர்ட், எக்சிட் வார்னிங் சிஸ்டம் என பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேநேரம், இந்த தொழில்நுட்பமானது ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே ஆகிய இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடியாக்கிற்கான புதிய அம்சங்கள் என்ன?

கூடுதலாக புதிய கோடியாக்கின் ஸ்போர்ட்லைன் ட்ரிம்மை, கிரில்லில் பதிக்கப்பட்ட எல்இடி ஸ்ட்ரிப் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த அம்சங்கள் கோடியாக் செலக்சன் எல்&கே வேரியண்ட்டிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தன. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்கோடா கோடியாக் உள்ளூர் சந்தையில் தொடர்ந்து டொயோட்டா ஃபார்ட்சுனர், ஜீப் மெரிடியன், ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் ஆர்-லைன் மற்றும் நிசான் எக்ஸ்-ட்ரெயில் ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து போட்டியிடுகிறது.

ஸ்கோடா கோடியாக் - இன்ஜின் விவரங்கள்:

புதிய ஸ்கோடா கோடியாக்கில் எந்தவித மாற்றமும் இன்றி அதே 2.0L டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது 204bhp சக்தியையும் 320Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ட்ரான்ஸ்மிஷன் பணிகளை 7-ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் கவனித்துக்கொள்கிறது. இந்த இன்ஜின்-கியர்பாக்ஸ் அமைப்பானது லிட்டருக்கு 14.86 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த SUV, AWD (ஆல்-வீல் டிரைவ்) ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI