Kia Sonet 2026 Transmission Upgrade: கியா சோனெட் டீசல் எடிஷனில் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.
கியா சோனெட் - புதிய வேரியண்ட்கள் அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான சோனெட்டில், மேலும் நான்கு புதிய வேரியண்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன. HTE (O), HTK (O), HTK+ மற்றும் HTK+ (O) எனும் வேரியண்ட்களின் விலையானது, ரூ.9.77 லட்சத்தில் தொடங்கி ரூ.11.56 லட்சம் வரை நீள்கிறது. புதிய டர்போ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களான HTK (O) மற்றும் HTK+ (O) வேரியண்ட்களின் விலை முறையே ரூ.9.89 லட்சம் மற்றும் ரூ.10.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக தனது சோனெட் லைன் - அப்பிற்கு புதியதாக மேக்மா ரெட் எனும் வெளிப்புற வண்ண ஆப்ஷனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. புதிய விரிவாக்கத்தின் மூலம் அதன் பிரிவில் இரண்டு டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பங்களையும் இவ்வளவு குறைந்த விலையில் வழங்கும் சில SUVகளில் ஒன்றாக சோனெட் உருவெடுத்துள்ளது.
சோனெட் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை விவரங்கள்:
| வேரியண்ட்கள் | பெட்ரோல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் | டீசல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் |
| HTE (O) | - | ரூ.9.77 லட்சம் |
| HTK (O) | ரூ.9.89 லட்சம் | ரூ.10.72 லட்சம் |
| HTK + | - | ரூ.11.08 லட்சம் |
| HTK + (O) | ரூ.10.83 லட்சம் | ரூ.11.56 லட்சம் |
| HTX | ரூ.11.59 லட்சம் | ரூ.12.02 லட்சம் |
| GTX | ரூ.13.59 லட்சம் | ரூ.14.09 லட்சம் |
| X-Line | ரூ.13.65 லட்சம் | - |
புதிய வேரியண்ட்களின் அறிமுகத்தின் மூலம், சோனட் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்டை முன்பை காட்டிலும், ரூ.2.25 லட்சம் மலிவு விலையில் வாடிக்கையாளர்கள் தற்போது அணுகலாம். முன்னதாக சோனெட்டின் டீசல் ஆட்டோமேடிக் ஆப்ஷனானது டாப் வேரியண்ட்களான HTX மற்றும் GTX ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. அவற்றின் விலை முறையே ரூ.12.02 லட்சம் மற்றும் ரூ.14.09 லட்சம் ஆகும். சோனெட்டில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய விரும்புவோருக்கு தற்போது, டீசலில் ஆறு ஆப்ஷன்களும், பெட்ரோலில் 5 ஆப்ஷன்களும் உள்ளன.
சோனெட்டின் இன்ஜின், ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்
கியா சோனெட்டானது தற்போது மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறத். அதில் 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஆகியவை அடங்கும். டர்போ பெட்ரோல் இன்ஜினில் புதியதாக 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனும், டீசலில் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் காரின் ரேஞ்ச் முழுமைக்கும் ஆட்டோமேடிக் ஆப்ஷனை கியா விரிவுபடுத்தியுள்ளது.
புதிய ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்
இன்ஜின் விவரங்கள் | வேரியண்ட் | ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் |
|---|---|---|
டீசல் (1.5லி) | HTE(O) | 6AT |
டீசல் (1.5லி) | HTK(O) | 6AT |
டீசல் (1.5லி) | HTK+ | 6AT |
டீசல் (1.5லி) | HTK+(O) | 6AT |
டர்போ பெட்ரோல் (1.0லி) | HTK(O) | 7DCT |
டர்போ பெட்ரோல் (1.0லி) | HTK+(O) | 7DCT |
Car loan Information:
Calculate Car Loan EMI