Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 

25 ஆண்டுகளில் இல்லாத சரிவு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது மிகவும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தில் பல கார் உற்பத்தி நிறுவனங்களும், வலுவான தடத்தை பதிக்க முனைப்பு காட்டி வருகின்றன. அதற்கான சாட்சியாகவே உள்ளூர் கார் உற்பத்தியாளரான மஹிந்த்ரா, வரலாற்றில் முதன்முறையாக ஓராண்டிற்கான ஒட்டுமொத்த விற்பனையில் முதல்முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம், கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இரண்டாவது இடம் வகித்து வந்த ஹுண்டாய், ஒரே அடியாக நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஹுண்டாய் தற்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ப்ராண்டின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆன ஐ20 கார் மாடலின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய் ஐ20 கார் மாடலின் விலை குறைப்பு:

ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐ20 கார் மாடலின் குறிப்பிடத்தக்க வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டு, எண்ட்ரி லெவல் வேரியண்ட்களில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கிற்கான அணுகல் எளிதாக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றமானது எரா, மேக்னா எக்சிக்யூடிவ் மற்றும் மேக்னா வேரியண்ட்கள் மீது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காரின் தொடக்க விலையானது தற்போது ரூ.5.99 லட்சமாக உள்ளது. தொடக்க நிலை வேரியண்டான எரா மீது 87 ஆயிரம் ரூபாய் வரையிலும், மேக்னா மற்றும் மேக்னா எக்சிக்யூடிவ் மாடல்கள் மீது 13 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

ஹுண்டாய் ஐ20 - புதிய விலைப்பட்டியல்:

பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில், ஐ20 கார் மாடலானது மொத்தமாக 16 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.7.12 லட்சத்தில் தொடங்கி ரூ.13.16 லட்சம் வரை நீள்கிறது.

ஹுண்டாய் ஐ20 வேரியண்ட்விலை (எக்ஸ் - ஷோரூம்)

சென்னையில் ஆன் - ரோட் விலை

எராரூ..5.99 லட்சம்ரூ.7.12 லட்சம்
மேக்னா எக்சிக்யூடிவ்ரூ.6.86 லட்சம்ரூ.8.34 லட்சம்
மேக்னாரூ.7.12 லட்சம்ரூ.8.64 லட்சம்
ஸ்போர்ட்ஸ்ரூ.7.74 லட்சம்ரூ.9.37 லட்சம்
ஸ்போர்ட்ஸ் DTரூ.7.83 லட்சம்ரூ.9.48 லட்சம்
மேக்னா IVTரூ.8.13 லட்சம்ரூ.9.82 லட்சம்
ஸ்போர்ட்ஸ் Optரூ.8.28 லட்சம்ரூ.9.99 லட்சம்
ஸ்போர்ட்ஸ் Opt Knightரூ.8.37 லட்சம்ரூ.10.09 லட்சம்
ஆஸ்டாரூ.8.61 லட்சம்ரூ.10.38 லட்சம்
ஸ்போர்ட்ஸ் IVTரூ.8.75 லட்சம்ரூ.10.57 லட்சம்
ஆஸ்டா Optரூ.9.15 லட்சம்ரூ.11 லட்சம்
ஸ்போர்ட்ஸ் Opt IVTரூ.9.20 லட்சம்ரூ.11.08 லட்சம்
ஆஸ்டா Opt DTரூ.9.31 லட்சம்ரூ.11.19 லட்சம்
ஆஸ்டா Opt IVTரூ.10.34 லட்சம்ரூ.13.02 லட்சம்
ஆஸ்டா Opt IVT DTரூ.10.42 லட்சம்ரூ.13.12 லட்சம்
ஆஸ்டா Opt IVT DT Knightரூ.10.43 லட்சம்ரூ.13.16 லட்சம்

ஹுண்டாய் ஐ20 - எண்ட்ரி லெவல் வேரியண்ட் விவரங்கள்

ஹுண்டாய் ஐ20 - எரா

திருத்தப்பட்ட விலை நடவடிக்கையின் மூலம், ஐ20 காரின் எரா வேரியண்டானது,எண்ட்ரி லெவல் ஹேட்பேக்கிலிருந்து ப்ரீமியம் ஹேட்ச்பேக் வாங்க விரும்புவோருக்கான பரிசீலனை பட்டியலுக்குள் வந்துள்ளது. அடிப்படை வேரியண்டாக இருந்தாலும், 6 ஏர்பேக்குகள் நிலையாக வழங்கப்படுவதோடு, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், டைப் C USB சார்ஜிங், முன் மற்றும்பின்புற ஸ்கிட் ப்ளேட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஹுண்டாய் ஐ20 - மேக்னா எக்சிக்யூடிவ்

அதேநேரம், மேக்னா எக்சிக்யூடிவ் வேரியண்டில் கூடுதலாக ஆட்டோமேடிக் முகப்பு விளக்குகள், ஹைலைன் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVMகள், சாவி இல்லாத நுழைவு, ஸ்டியரிங்கில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ மற்றும் ப்ளூடூத் கன்ட்ரோல்கள் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஹுண்டாய் ஐ20 - மேக்னா

நிலையான மேக்னா வேரியண்டில் சொகுசான பயண அனுபவத்திற்கான பல் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், ரியர் ஏசி வெண்ட்கள், ஸ்டோரேஜ் உடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், டீலர் மூலம் இன்ஸ்டால் செய்யக்கூடிய வசதியா 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. ரூ.14,999 மதிப்பிலான இந்த அம்சம் மூலம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ரியர் கேமரா அணுகலை பெற முடியும். 3 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

வாரண்டி விவரங்கள்:

ஹுண்டாய் ஐ20 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் நிலையான 3 வருட அல்லது 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள இந்த மாடலானது 14 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களுக்கு விற்பனையாகியுள்ளது. ப்ராண்டின் மிகவும் வெற்றிகரமான மாடலாககவும் திகழ்கிறது. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள விலை பட்டியல் மூலம், மாருதியின் பலேனோ, டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா உடன் இன்னும் தீவிரமாக போட்டியிட உள்ளது.

ஹுண்டாய் ஐ20 -போட்டியாளர்களின் தொடக்க விலை

மாடல்கள்தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்)
ஹுண்டாய் ஐ20ரூ.5.99 லட்சம்
மாருதி சுசூகி பலேனோரூ.5.99 லட்சம்
டாடா ஆல்ட்ரோஸ்ரூ.6.30 லட்சம்
டொயோட்டா க்ளான்ஸாரூ.6.39 லட்சம்

Car loan Information:

Calculate Car Loan EMI