மேலும் அறிய

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?

Hyundai i20 2026 Price Change: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் கண்ட சரிவில் இருந்து மீண்டு வரும் நோக்கில், ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது.

 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 

25 ஆண்டுகளில் இல்லாத சரிவு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது மிகவும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தில் பல கார் உற்பத்தி நிறுவனங்களும், வலுவான தடத்தை பதிக்க முனைப்பு காட்டி வருகின்றன. அதற்கான சாட்சியாகவே உள்ளூர் கார் உற்பத்தியாளரான மஹிந்த்ரா, வரலாற்றில் முதன்முறையாக ஓராண்டிற்கான ஒட்டுமொத்த விற்பனையில் முதல்முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம், கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இரண்டாவது இடம் வகித்து வந்த ஹுண்டாய், ஒரே அடியாக நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஹுண்டாய் தற்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ப்ராண்டின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆன ஐ20 கார் மாடலின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய் ஐ20 கார் மாடலின் விலை குறைப்பு:

ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐ20 கார் மாடலின் குறிப்பிடத்தக்க வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டு, எண்ட்ரி லெவல் வேரியண்ட்களில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கிற்கான அணுகல் எளிதாக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றமானது எரா, மேக்னா எக்சிக்யூடிவ் மற்றும் மேக்னா வேரியண்ட்கள் மீது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காரின் தொடக்க விலையானது தற்போது ரூ.5.99 லட்சமாக உள்ளது. தொடக்க நிலை வேரியண்டான எரா மீது 87 ஆயிரம் ரூபாய் வரையிலும், மேக்னா மற்றும் மேக்னா எக்சிக்யூடிவ் மாடல்கள் மீது 13 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 


Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?

ஹுண்டாய் ஐ20 - புதிய விலைப்பட்டியல்:

பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில், ஐ20 கார் மாடலானது மொத்தமாக 16 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.7.12 லட்சத்தில் தொடங்கி ரூ.13.16 லட்சம் வரை நீள்கிறது.

ஹுண்டாய் ஐ20 வேரியண்ட் விலை (எக்ஸ் - ஷோரூம்)

சென்னையில் ஆன் - ரோட் விலை

எரா ரூ..5.99 லட்சம் ரூ.7.12 லட்சம்
மேக்னா எக்சிக்யூடிவ் ரூ.6.86 லட்சம் ரூ.8.34 லட்சம்
மேக்னா ரூ.7.12 லட்சம் ரூ.8.64 லட்சம்
ஸ்போர்ட்ஸ் ரூ.7.74 லட்சம் ரூ.9.37 லட்சம்
ஸ்போர்ட்ஸ் DT ரூ.7.83 லட்சம் ரூ.9.48 லட்சம்
மேக்னா IVT ரூ.8.13 லட்சம் ரூ.9.82 லட்சம்
ஸ்போர்ட்ஸ் Opt ரூ.8.28 லட்சம் ரூ.9.99 லட்சம்
ஸ்போர்ட்ஸ் Opt Knight ரூ.8.37 லட்சம் ரூ.10.09 லட்சம்
ஆஸ்டா ரூ.8.61 லட்சம் ரூ.10.38 லட்சம்
ஸ்போர்ட்ஸ் IVT ரூ.8.75 லட்சம் ரூ.10.57 லட்சம்
ஆஸ்டா Opt ரூ.9.15 லட்சம் ரூ.11 லட்சம்
ஸ்போர்ட்ஸ் Opt IVT ரூ.9.20 லட்சம் ரூ.11.08 லட்சம்
ஆஸ்டா Opt DT ரூ.9.31 லட்சம் ரூ.11.19 லட்சம்
ஆஸ்டா Opt IVT ரூ.10.34 லட்சம் ரூ.13.02 லட்சம்
ஆஸ்டா Opt IVT DT ரூ.10.42 லட்சம் ரூ.13.12 லட்சம்
ஆஸ்டா Opt IVT DT Knight ரூ.10.43 லட்சம் ரூ.13.16 லட்சம்

ஹுண்டாய் ஐ20 - எண்ட்ரி லெவல் வேரியண்ட் விவரங்கள்

ஹுண்டாய் ஐ20 - எரா

திருத்தப்பட்ட விலை நடவடிக்கையின் மூலம், ஐ20 காரின் எரா வேரியண்டானது,எண்ட்ரி லெவல் ஹேட்பேக்கிலிருந்து ப்ரீமியம் ஹேட்ச்பேக் வாங்க விரும்புவோருக்கான பரிசீலனை பட்டியலுக்குள் வந்துள்ளது. அடிப்படை வேரியண்டாக இருந்தாலும், 6 ஏர்பேக்குகள் நிலையாக வழங்கப்படுவதோடு, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், டைப் C USB சார்ஜிங், முன் மற்றும்பின்புற ஸ்கிட் ப்ளேட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஹுண்டாய் ஐ20 - மேக்னா எக்சிக்யூடிவ்

அதேநேரம், மேக்னா எக்சிக்யூடிவ் வேரியண்டில் கூடுதலாக ஆட்டோமேடிக் முகப்பு விளக்குகள், ஹைலைன் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVMகள், சாவி இல்லாத நுழைவு, ஸ்டியரிங்கில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ மற்றும் ப்ளூடூத் கன்ட்ரோல்கள் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஹுண்டாய் ஐ20 - மேக்னா

நிலையான மேக்னா வேரியண்டில் சொகுசான பயண அனுபவத்திற்கான பல் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், ரியர் ஏசி வெண்ட்கள், ஸ்டோரேஜ் உடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், டீலர் மூலம் இன்ஸ்டால் செய்யக்கூடிய வசதியா 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. ரூ.14,999 மதிப்பிலான இந்த அம்சம் மூலம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ரியர் கேமரா அணுகலை பெற முடியும். 3 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.


Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?

வாரண்டி விவரங்கள்:

ஹுண்டாய் ஐ20 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் நிலையான 3 வருட அல்லது 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள இந்த மாடலானது 14 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களுக்கு விற்பனையாகியுள்ளது. ப்ராண்டின் மிகவும் வெற்றிகரமான மாடலாககவும் திகழ்கிறது. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள விலை பட்டியல் மூலம், மாருதியின் பலேனோ, டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா உடன் இன்னும் தீவிரமாக போட்டியிட உள்ளது.

ஹுண்டாய் ஐ20 -போட்டியாளர்களின் தொடக்க விலை

மாடல்கள் தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்)
ஹுண்டாய் ஐ20 ரூ.5.99 லட்சம்
மாருதி சுசூகி பலேனோ ரூ.5.99 லட்சம்
டாடா ஆல்ட்ரோஸ் ரூ.6.30 லட்சம்
டொயோட்டா க்ளான்ஸா ரூ.6.39 லட்சம்

Frequently Asked Questions

ஹுண்டாய் ஐ20 காரின் விலை ஏன் குறைக்கப்பட்டுள்ளது?

ஹுண்டாய் அதன் நான்காவது இடத்திற்கு சரிந்த நிலையில், சந்தையில் மீண்டும் வலுவாக போட்டியிட ஐ20 காரின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளது.

ஐ20 காரின் எந்த வேரியண்ட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது?

எரா, மேக்னா எக்சிக்யூடிவ் மற்றும் மேக்னா வேரியண்ட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன, இதனால் எண்ட்ரி லெவல் மாடல்கள் இன்னும் அணுகக்கூடியதாக மாறியுள்ளன.

திருத்தப்பட்ட ஹுண்டாய் ஐ20 காரின் தொடக்க விலை என்ன?

புதிய மாற்றங்களுக்குப் பிறகு, ஹுண்டாய் ஐ20 காரின் தொடக்க விலை ரூ.5.99 லட்சமாக உள்ளது.

ஹுண்டாய் ஐ20 காருக்கான வாரண்டி விவரங்கள் என்ன?

ஹுண்டாய் ஐ20 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் நிலையான 3 வருட அல்லது 10,000 கிலோ மீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 7XO: வசதிகளோடு, பாதுகாப்பும்..! 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்த்ராவின் 7 சீட்டர் - என்ன இருக்கு?
வசதிகளோடு, பாதுகாப்பும்..! 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்த்ராவின் 7 சீட்டர் - என்ன இருக்கு?
Honda Shine 125 on EMI: ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
Honda Bikes Scooters Under 1 lakh: ஹோண்டா பைக்கோ, ஸ்கூட்டரோ வாங்குற பிளான் இருக்கா.? ரூ.1 லட்சத்துக்குள்ள கிடைக்குற மாடல்கள் லிஸ்ட்
ஹோண்டா பைக்கோ, ஸ்கூட்டரோ வாங்குற பிளான் இருக்கா.? ரூ.1 லட்சத்துக்குள்ள கிடைக்குற மாடல்கள் லிஸ்ட்
BMW i5 LWB EV Sedan: ஒரே சார்ஜில் 669 கி.மீ.! சொகுசோ சொகுசு.! அறிமுகமான BMW-வின் புதிய i5 LWB செடான் கார்; முழு விவரம்
ஒரே சார்ஜில் 669 கி.மீ.! சொகுசோ சொகுசு.! அறிமுகமான BMW-வின் புதிய i5 LWB செடான் கார்; முழு விவரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Embed widget